Wednesday, October 28, 2015

மீரியபெத்த மண்சரிவு - இப்படிக்கு ஒருவருடம் !!

இப்படிக்கு ஒருவருடம் !!

பனி மூடிய சிகரங்களால் ஆன
மலை கிராமம் - மீரியபெத்த
எங்கள் கற்பனைகளின் மையம்

உலுக்கியது மண்ணை மட்டுமல்ல
எங்களது மனங்களையும் தான்

நாம் நடந்த பாதை எங்கே
எம்மோடு பழகிய நண்பர்கள் எங்கே
வசித்த வீடு எங்கே
நேசித்த உயிர்கள் எங்கே
சுவாசித்த காற்று எங்கே

எதிர்பாராமல் நடந்தது
இயற்கையின் கோரதாண்டவம்
எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி
தாண்டவம் ஆடியவர்கள்  - அரசியல் கள்வர்கள்
அது, இது. உது தருவோமென்று....!!

புதையுண்ட இடத்தில்
உயிரின் சதையை தின்ற மண்,
தந்த புற்கள் மட்டும் தான் மிச்சம்!

இன்று செழிப்பாக இருக்கின்றது - புற்கள் மட்டுமே
மண்ணிற்கு உரம் தந்த
எம் உறவுகளின் ஆசைகள்
என்னவாயிற்று ???

தப்பித்தோம் பிழைத்தோம் - என
வந்தர்வர்களின் வாழ்விற்கு
உத்தராவதம் தருவோர் யாரோ...?
(தன்னம்பிக்கை மட்டும் தான்)

எங்கள் வரலாறு நீண்டது போல
வாழ்வும் மண்ணோடு மண்ணாக
நீண்டது ஏனோ....?

Friday, May 7, 2010

அகர முதல எழுத்தெல்லாம் என் அம்மா முதற்றே உலகு

ஆயிரம் தான் கவி சொன்னேன்
அழகழகா
பொய் சொன்னேன்
பெத்தவளே உன் பெருமை
ஒத்த வரி சொல்லலையே
காதெல்லாம் மகன் பாட்டு
காகிதத்தில் அவன் எழுத்து
ஊரெல்லாம் மகன் பேச்சு
உன் கீர்த்தி எழுதலையே
எழுதவோ படிக்கவோ இயலாத தாய் பற்றி
எழுதி என்ன லாபமன்னு எழுதாம போனேனோ?

எழுதவோ படிக்கவோ இயலாத தாய் பற்றி
எழுதி என்ன லாபமன்னு எழுதாம போனேனோ?
வையத்தில் ''வைத்தி'' (என்னுடைய தாத்தா யெர்)பெற்ற பொன்னே குலமகளே
என் தாயே (வை.சீதாலட்சமி)அம்மா உங்களை வணங்கி
இந்தப் பதிவில் அன்யைர் தினத்தினை பற்றி சிறப்பிக்கின்றேன்.


" இனிய அன்னையர் தின வாழத்துக்கள்"

தாயிற் சிறந்த கோவிலுமில்லை....." என்ற வைரவரிகள் தமிழ் கூறும் நல்லுலகில் பவனி வரும் இரத்தினச் சுருக்கமான வார்த்தை. ஒரு சகோதரியாக, தாயாக, தாரமாக, தோழியாக இல்லத்தில் உள்ளோரைப் பக்குவப்படுத்தும் பாட்டியாக, அனுபவங்களின் அரவணைப்பில் வழி நடத்திச் செல்லும் ஆசானாக..இப்படிப் பெண் தன் வாழ்நாளில் எத்தனையோ பாத்திரங்களில் வலம் வந்தாலும் அன்னை என்கிற பாத்திரம்தான் மிக உன்னதமான இடத்தை வகிக்கிறது; இப்படிப்பட்ட அன்னையைக் கெளரவிக்கும் வகையில் தற்போது உலகெங்கும் "அன்னையர் தினம் " அகிலமெங்கும் கொண்டாடக் காரணமாக இருந்தவர் பற்றி நாம் சற்றுத் தெரிந்து கொள்வோமா? எந்தச் செய்திக்கும் ஒரு மூலம் இருக்குமில்லையா? அந்த வகையில் அன்னையர் தினம் முகிழ்க்கக் காரண கர்த்தாவாக இருந்த வரை அறிவது சற்றுப் பொருத்தமாக இருக்கும் இல்லையா?

அன்னையர் தினம் தான் பழங்காலத்தில் தாய்க் கடவுளுக்கு வசந்த விழாவாகக் கொண்டாடப் பெற்றதாக வரலாற்று ஆய்வாளர்கள் கருத்துரைத்துள்ளனர். அன்றைய கிரேக்கப் பேரரசன் ரோனஸ் (Cronus) மனைவியும் கடவுளின் அன்னையாகவும் மக்களால் வணங்கப் பெற்ற ரேயா (Rhea) வுக்கு விழாவெடுத்தான். மக்கள் இந்த விழாவைக் கோலாகலமாகக் கொண்டாடினர்.

இதே காலகட்டத்தில், அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பாக ரோமப் பேரரசில் கடவுளின் அன்னையாகக் கருதி வணங்கப் பெற்ற சைப்ளி (Cybele) க்கு விழா கோலாகலமாகக் கொண்டாடப் பெற்ற வரலாறும் உண்டு. மூன்று நாட்கள் கொண்டாடப்பட்ட இந்தப் பெரு விழாவிற்கு ஹிலாரியா(Hilaria) விழா என்றும் மார்ச் மாதத்தில் 15 முதல் 18 ம் தேதி வரை என்று ஆண்டுதோறும் கொண்டாடியதற்கான சான்றுகள் உள்ளன.

16ம் நூற்றாண்டில் கிரீஸ் நாட்டில்தான் "MOTHERING SUNDAY" என்ற நாள் முதன் முதலாக அனுசரிக்கப் பட்டிருக்கிறது. ஈஸ்ட்டர் வரும் மாதத்தின் நான்காம் ஞாயிற்றுக் கிழமை இயேசுவின் தாயை நினைவு கூறும் வகையில் இந்த நாள் கொண்டாடப்பட்டு வந்துள்ளது. ஆனால் அமெரிக்காவில் முகிழ்த்த அன்னையர் தினம்தான் இன்றைக்கு உலகெங்கும் கொண்டாடக் காரணமாக அமைந்தது எனலாம்.

1600களில் இங்கிலாந்தில் இடம் விட்டு இடம்பெயர்ந்து வேலை செய்து வந்தனர். இவர்கள் தாங்கள் வேலை செய்யும் எஜமானர்கள் எங்கு வேலை செய்யச் சொல்லுகிறார்களோ அங்கேயே தங்கி வேலை பார்ப்பதும், குடும்பத்தை ஓரிடத்திலுமாய் வைத்துவிட்டுச் செல்லுவதையும் வழக்கமாய்க் கொண்டிருந்தனர்.

அப்படி வேலையில் இருப்பவர்களுக்கு வருடாந்திர விடுமுறை போல இந்த மதரிங் சண்டேக்கு விடுப்பு அளித்து எஜமானர்கள் அனுப்புவது வழக்கம். அப்படிச் செல்லுபவர்கள் ஒருவித விசேசமான கேக் ( அதையும் மதரிங் கேக் என்றே குறிப்பிட்டார்கள்.) தயாரித்தோ அல்லது வாங்கிச் சென்றோ தமது அன்னையரோடு விடுமுறையைக் கழித்திருக்கிறார்கள்.

அமெரிக்காவில் அன்னையர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று 1872ல் ஜூலியா வார்டு ஹோவ் (Julia Ward Howe ) முதன் முதலில் பாஸ்டனில் ஒரு பெருந்திரளான கூட்டத்தைக் கூட்டினார். திருமதி ஹோவ், குடும்பத்தில் அயராது உழைக்கும் அன்னைக்கு ஒருநாளை அமைதியாகக் கழிக்க அன்னையர் தினம் என்று ஒருநாளை அனுசரிக்க வேண்டும் என்று அக் கூட்டத்தில் பெருங்குரலெடுத்துக் கூறினாலும் அவருக்குப் பின் அதை எடுத்துச் செல்ல யாரும் முன் வரவில்லை.

"அன்னா மரியா ரீவிஸ் ஜார்விஸ்" என்ற பெண் சமூக சேவகி அமெரிக்காவின் மேற்கு வர்ஜினியா மாநிலத்தில் கிரா·ப்டன் (GRAFTON) என்ற கிராமத்தில் வாழ்ந்தவர்.

இவர் கிறிஸ்தவ பாதிரியார் அருட்திரு. ரீவிஸ் மகளாவார். 1852ல் அன்னா, கிரான்வில்லி இ ஜார்விஸ் என்பாரை மணம் புரிந்து மேற்கு வர்ஜீனியாவின் பிலிப்பியிலிருந்து கிராப்டனில் குடியேறினார். பணிபுரியும் பெண்களுக்கான நலச் சங்கங்களை துவக்கினார்; பணிபுரியும் பெண்கள் டி.பி.நோயால் பாதிக்கப்பட்ட போது அவர்களுடைய குடும்பங்களில் உதவி செய்ய இந்தச் சங்கங்கள் பணிப் பெண்களை வேலைக்கமர்த்தி உதவி செய்தது.

பாட்டிலில் வினியோகிக்கப்படும் பால் மற்றும் உணவு வகைகளை பரிசோதித்து அளிக்கும் பொறுப்பையும் இந்தச் சங்கம் ஏற்றுக் கொண்டு ஆற்றிய சேவைகளைக் கண்ட அண்டை நகரங்களான ·பெட்டர்மேன், ப்ருண்ட்டிடவுன் பிலிப்பி, மற்றும் வெப்ஸ்டர் போன்ற நகரங்களும் சங்கங்களை துவக்கிட விருப்பம் தெரிவிக்க அன்னா சுகாதரக் குறைவான சுற்றுச்சூழற் கேடுகள் மறைய அங்கெல்லாம் சென்று வழி நடத்தினார். தன்னுடைய குழந்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக இறந்து போக நேரிட்ட போதிலும் மனம் தளராது பணிபுரிந்தார்.

பால்டிமோர் நகரிலிருந்து ஒஹையோ வரையிலான இருப்புப்பாதை அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்த போது உள்நாட்டுக் கலகம் மூள இந்தச் சங்கங்களின் பணி இரட்டிப்பானது. யுத்தத்தில் காயம் பட்ட வீரர்களை சங்க கட்டிடத்தில் கொண்டு வந்து வைத்து மருந்திட்டு, உணவு,உடையளித்து காக்கும் பணியினை சங்கங்கள் மூலமாக அன்னா செய்தார்.

அன்று யுத்த களத்தில் அமெரிக்க வீரர்கள் பலியாயினர். அவர்களின் குடும்பங்களும் சிதைந்து சீரழிந்து நாலாபக்கமும் சிதறிப்போயினர். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரவும் அவர்களின் நல்வாழ்க்கைக்கும் சமாதானத்திற்கும் அயராது பாடுபட்டவர்தான் "அன்னா ஜார்விஸ்". அவரின் பார்வையற்ற மகளுடன் தன் இறுதி மூச்சுவரை சமூக சேவகியாகவே வாழ்ந்து 1904ல் மறைந்தார். அவருடைய 72வது வயதைக் குறிக்கும் வகையில் பிலடெல்பியாவின் வெஸ்ட் லாரல் ஹில்லில் புதை (விதை) க்கப்பட்டபோது கிராப்டன் ஆன்ரூஸ் சர்ச்சில் 72 முறை ஆலய மணி ஒலித்தது! மகள் ஜார்விஸ் முதன்முதலாக தனது அன்னையின் நினைவாக உள்ளூரில் உள்ள மெத்தடிஸ்ட் சர்ச்சில் 1907ம் ஆண்டு மே மாதம் 10ம் தேதி சிறப்பு வழிபாடு ஒன்றை நடத்தினார்.1908ம் ஆண்டு மே 10-ம் நாள் பிலடெல்பியா அரங்கில் 5,000 பேர் அமரக்கூடிய அரங்கில் 15,000 பேர்கள் திரண்ட கூட்டத்தில் ஒருமணி நேரம் பத்துநிமிடங்கள் ஜார்விஸ் அன்னையர் தின உரை நிகழ்த்தினார்! அதனைத் தொடர்ந்து அன்னையர் தினக் கமிட்டி ஒன்றை அங்கே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அந்த அமைப்பு உலக அளவில் இதன் நோக்கத்தை எடுத்துச் செல்லும் என்று அறிவித்தார்.

ஜார்விஸ் அம்மையார் எதிர்பார்த்ததை விட 1909-ம் ஆண்டே அமெரிக்காவின் 45 மாநிலங்களிலும் போர்ட்டோ ரிக்கோ, ஹாவாய், கனடா, மற்றும் மெக்சிகோவில் அன்னையர் தினத்தை விசேடப் பிரார்த்தனைகள் வெள்ளை மற்றும் சிவப்பு துணிகளை அணிந்து சிறப்பாகக் கொண்டாடினர்.

1910ம் ஆண்டு மேற்கு வர்ஜீனியா ஆளுநர் வில்லியம் இ கிளாஸ்காக் ஏப்ரல் 26ம்தேதி அன்னையர் தினமாக அறிவிப்பை வெளியிட்டார். அமெரிக்க மாநிலங்களவை உறுப்பினர்களான அலபாமா ஹெ·ப்ளின், டெக்ஸாஸ் செப்பார்டு ஆகிய இருவரும் இணைந்து மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக் கிழமையை அன்னையர் தினமாக அறிவிக்கக் கோரும் சட்ட முன்வடிவைச் சமர்ப்பித்தனர்.

1913ம் ஆண்டு தன் பணி நிமித்தம் மகள் ஜார்விஸ் பென்சில்வேனியா மாநிலத்தில் பிலடெல்பியாவில் குடியேறினார். தாயார் விட்டுச் சென்ற சமூக சேவையை மகள் ஜார்விஸ் தன் தனிப்பெரும் கடமையாகக் கருதித் தொடர்ந்தார்.

கஷ்டப்படுகிற, வாழ்க்கையில் இன்னலும், சோதனைகளும் ஒருசேரத் தாக்கி மனம் வெந்து நொந்து சமூகத்தில் ஓரங்கட்டப் பட்டவர்களுக்கான அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். தன் தாயாரின் நினைவாகவும், தத்தம் வீடுகளில் அவரவர் அன்னையர்களும் கெளரவிக்கப் பட வேண்டும்; எல்லோர் இல்லங்களிலும் அன்றைய தினம் மகிழ்ச்சி ததும்ப வேண்டும் என்று எண்ணினார். தம் எண்ணத்தை பென்சில்வேனியா மாநில அரசுக்குத் தெரிவித்தார். அரசும் அவர் கருத்தை ஏற்று 1913ம் ஆண்டு முதல் அன்னையர் தினம் என அங்கீகரித்து அறிவித்தது.

ஆனால், ஜார்விஸ் திருப்தி அடையவில்லை. ஆயிரக்கணக்கில் அரசியல்வாதிகளுக்கும், தன்னார்வ அமைப்புகளுக்கும், வர்த்தக அமைப்புகளுக்கும் கடிதங்கள் எழுதி அமெரிக்கா முழுவதும் "அன்னையர் தினம்" கொண்டாடவும் அந்நாளை அரசின் விடுமுறை நாளாகவும் அங்கீகரித்து அறிவிக்க வேண்டுமென அமெரிக்க அதிபருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

1914ம் ஆண்டு அமெரிக்க அதிபர் வுட்ரோ வில்சன் வருடம்தோறும் மே மாதம் இரண்டாம் ஞாயிறை அதிகாரப் பூர்வமாக அன்னையர் தினமாகவும், அன்று விடுமுறை தினமாகவும் இருக்கும் அறிவிப்பை வெளியிட்டார். இதனையே கனடா அரசாங்கமும் ஏற்று அங்கீகரித்து அறிவித்தது. அதுமட்டுமல்ல ஆப்கானிஸ்தானத்திலிருந்து கோஸ்டாரிகா வரை 46 நாடுகள் இதே நாளில் "அன்னையர் தினம்" என அறிவித்து நடைமுறைப் படுத்தியது. ஜார்விஸ் அளவற்ற மகிழ்ச்சியடைந்தாலும் முழுமன நிறைவடையவில்லை. உலகமெங்கும் அன்னையர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்ற எண்ணத்திற்கு அடுத்த வித்தினை இட்டார்.

எதையும் வியாபாரமாக்கி பணம் பண்ணும் அமைப்பு "அன்னையர் தினம்" அன்று அன்னையின் படம் ஒன்றைப் பொறித்து கொடியொன்றை விற்று காசு....ஸாரி...டாலர்கள் பார்த்தது. வெகுண்டெழுந்தார் ஜார்விஸ். 1923ம் ஆண்டு இத்தகைய கொடி விற்பனையை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார். என்னுடைய நோக்கம் அன்னையர் தினம் "செண்டிமெண்ட்" நாளாக இருக்க வேண்டுமேயல்லாமல் டாலர் தேற்றுகிற நாளாக இருக்கக் கூடாது. இத்தகைய வசூலுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று வாதாடி வென்றார்.

உலகம் முழுக்க "அன்னையர் தினம்" அனுசரிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் அன்னையைப் போற்றுகிற, வாழ்த்துகிற, மகிழ்விக்கின்ற நாளாக அன்றைய தினம் மலர்ந்து மணம் பரப்ப வேண்டும் என்பதுதான் என் ஆசை என்று தனது 84வது வயதில் தனியார் மருத்துவமனையில் இறப்பதற்கு முன் தன்னைச் சந்தித்த நிருபர்களிடம் வெளிப்படுத்தினார். அவருடைய ஆசை இன்று அனேகமாக பூர்த்தியாகி விட்டது என்றே சொல்லலாம்.

"ஒரு அன்னையின் அன்பு ஒவ்வொரு நாளும் புதிதாகவே பூக்கும் என்ற ஜார்விஸ் இப்படிக் குறிப்பிடுகிறார். இந்தநாளில் நம்மைப் பெற்றெடுத்த தாய்க்கு இணையற்ற அன்பைப் பொழிய பிரத்யேகமான தீர்மானங்களை நமக்கு நாமே நிறைவேற்றி செயல்படுத்த வேண்டும். இனிய வார்த்தைகள் மூலம், அன்பளிப்புகள் மூலம், நம் அபிமானத்தின் மூலம், இன்னும் எந்தெந்த வழிகளில் எல்லாம் நம் அன்பை வெளிப்படுத்துவதன் மூலம், அவளைச் சிறப்பியுங்கள். அன்னையின் இதயம் சந்தோசத்தால் ஒவ்வொரு நாளும் நிரம்பி வழியச் செய்யுங்கள். குறிப்பாக அன்னையர் தினத்தன்று அவளை விசேடமாக கவனியுங்கள். அன்னையின் அருகில் இல்லாத சூழலா, அடிக்கடி மடலிடுங்கள். அதுமட்டுமல்ல அவளிடமுள்ள விசேட குணத்தைச் சுட்டிக் காட்டி அவளை நீங்கள் எவ்வாறெல்லாம் நேசிக்கிறீர்கள் என்று உணர்த்துங்கள். ஈன்ற பொழுது மகிழ்ந்ததைக் காட்டிலும் அவளை உங்கள் செயல் மகிழ்விக்கச் செய்வதாக இருக்க வேண்டும் என்கிறார்.

"அன்னையர் தினம்" மூலம் தெரியாவிட்டாலும், இன்று அகிலம் அன்னையர் தினத்தை அவரவர் இஷ்டத்துக்கு கொண்டாடி மகிழ்கின்ற நாளாகத் திகழ்கிறது. சிங்கப்பூரில் சீனிவாசப் பெருமாள் கோவிலில் மகாலட்சுமிக்கு விசேச வழிபாடு செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுவது இந்த தினத்தில் இன்றும் நடைபெறுவதைக் காணலாம். தீபாவளி, பொங்கல், கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் போல அன்னையர் தினத்தை வாழ்த்து அட்டைகள், பரிசுப் பொருட்கள் என்று கொண்டாடத் தலைப்பட்டு விட்டனர்.

கணினியில் தேடுபொறியில் ஆங்கிலத்தில் Mothers day என்று தேடினால் 20,000,000 வலைப்பக்கங்கள் பலவிதமான வியாபார நுணுக்கங்களோடு மிளிர்வதைக் காணலாம்; அன்னையரை வாழ்த்த பூங்கொத்து அனுப்ப, வாழ்த்து அட்டைகள்! அன்னையை அலங்கரிக்க எங்கள் வைர வைடூரிய நகைகளை வாங்கிட! கைக்கெடிகாரம், ஒப்பனைபொருட்கள் பெட்டி... உங்கள் அன்னையை மகிழ்விக்க எங்கள் பரிசுக் கூடைகளை இன்றே வாங்கி அனுப்புங்கள் என்று விதவிதமாக வலையக அங்காடிகள் வகைவகையாய் கண்களைப் பறிக்கும் வண்ணம் கடை விரித்துள்ளனர்! அன்னையின் உருவப்படத்தைப் போட்டு வணிகம் செய்தவர்களுக் கெதிராக வழக்குத் தொடுத்து வெற்றிகண்ட ஜார்விஸ் அவர்களையும் இந்த நேரத்தில் எண்ணிப் பார்க்கிறோம்.

எகிப்து மற்றும் லெபனானில் மார்ச் 21ம்தேதியும், அங்கேரி, போர்ச்சுகல், தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின் நாடுகளில் மே மாதத்தின் முதல் ஞாயிறு அன்றும் பிரேசில், ஜெர்மனி, ஹாங்காங், இத்தாலி, ஜப்பான், நெதர்லாந்து, நியூசிலாந்து, சிங்கப்பூர், தைவான், அமெரிக்கா, கனடா, சுலோவோகியா, அல்பேனியா, டென்மார்க், பின்லாந்து, இத்தாலி, துருக்கி, ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் போன்ற நாடுகளில் மே மாதத்தின் இரண்டாம் ஞாயிறு அன்று கொண்டாடத் தலைப்பட்டதும் ஒவ்வோர் ஆண்டும் இந்தப் பட்டியலில் புதிது புதிதாக இடம் பிடித்து இன்றைக்கு உலகம் முழுவதும் "அன்னையர் தினம்" கொண்டாடும் நிலைக்கு வந்துவிட்டது.

அம்மா என்று அழைக்காத உயிர் ஏதும் உண்டா? அம்மா என்றால் அன்பு என்றும் தாயில்லாமல் நானில்லை; தானே எவரும் பிறந்ததில்லை; எனக்கொரு தாய் இருக்கின்றாள்; என்றும் என்னைக் காக்கின்றாள்...போன்ற திரைப்படப் பாடல்கள் அன்னையின் புகழை வீதிகளில் முழக்கினாலும் ஆதரவற்றோர் இல்லங்களிலும், முதியோர் இல்லங்களிலும் உள்ளம் உடைந்து நித்தம் கண்ணீர் விடும் அன்னையர்கள் நாளும் பெருகுவதும் ஒருபுறம் வேதனை தருவதும் தவிற்க இயலாததாகி வருகிறது. இந்த நாள் கொண்டாடப்படுவதன் மூலமாகவாவது ஒரு சில அன்னையர்கள் தன் பிள்ளைகளோடு வசிக்கும் பேறு கிடைக்கப் பிரார்த்திப்போம்.

நாமும் "மூலம்" அறிந்து கொண்டோம்; வாயார மனமார வாழ்த்திப் போற்றுவோம் நம் "அன்னையை!"


"மாதராய் பிறக்க மா தவம் செய்ய வேண்டும்"

என்று ம் உங்கள் மகன் விமல்

Thursday, November 26, 2009

புதுசு படைப்போம் அதையும் புதுசாக படைப்போம்

வணக்கங்க நீண்ட நாளுக்கு பின்பு பல வேலைகளின் மத்தியில் இந்த பதிவை உங்கள் முன் வைப்பதற்கு காரணம் இந்நாளின் உன்னதத்தை எண்ணியே. விழுவது சில தடவைகள் ஆனாலும் எழுவது பல தடவை....................சொல்லாமல் சொல்லுகிறேன்......... தயவுடன் இன்று ஒருநாளையாவது உங்களின் வாழ்வின் முக்கியமான 27 .11. 0000 முன்னுதாரணமான நாளாக அனைத்து தழிழ் உள்ளங்கள் ஏற்று இந்த நாளில் செய்ய வேண்டிய கடமைகளை செய்வோமாக..நிச்சயமாக நம்புங்கள் ...எதிர்பார்த்தது கிடைக்கும்.. என்னடா சம்பந்தமே இல்லாமல் பேசுறான் அப்படினுதானே நினைக்கிறிங்க..சம்பந்தப் படுத்தி பாருங்கள் புரியும் எதற்கு இந்த பில்டப் என்று... என்னங்க மெய்தானே.... நம்மில் சிலர் நினைப்பதுண்டு தனியாக எங்காவது சென்று வாழ்வோம் என்று, ஏன் நீங்கள் தனிமைப்படுத்த பட்டு விட்டீர்களா...? ம் ம்ம் ஒட்டு மொத்த எம் இனமே அப்படித்தானே.. எதற்கு நாம் அஞ்சி விழுந்து வாழவேண்டும்..? நம்மா ஒன்றாக இணைந்து தனித்து நாம் ஒரு புது உலகம் செய்வோம் அதற்காக விரைந்து வாரீர் இனியும் நாம் இந்த சாக்கடைகளை (அரசியல் வாதிகளை) நம்ப கூடாதுங்க.. புதுசு படைப்போம் அதையும் புதுசாக படைப்போம்.. மற்றையதை தூசு தட்டி புதுமை செய்வோம்......

நாளையவிடியலைஎதிர்பாத்து
..... ல் வி .....


Thursday, November 5, 2009

''அச்சுவலை சந்திப்பின் அனுபவ அறிக்கை''
பதற்றத்தோடு பதிவுலக சகாக்களை
சந்திக்க பகல் பேருந்தேறி புறப்பட்ட நான்
புலர்ந்தது மறுநாள் காலை கொழும்பில்
சந்திப்பன்று நேரமோ மதியம் இரண்டு
பயணத்தோடு பேருந்தில்
இருக்கிறம் காரியாலயத்ததை நோக்கி
என் இருப்பு நான் அமர்ந்திருந்த பேருந்து இருக்கையில்
இருந்தாலும்- - - மனதோ...
சந்திப்பை பற்றிய எண்ணத்தில்
(சொல்ல மறந்துவிட்டேன் எனது பள்ளி நண்பனின் அண்ணனின் பெயரும் ''சந்திப்'')

இடையில் தரி்த்த பேருந்தில் இரண்டு மூன்று நபர்கள் ஏற கண்டதுமே
சந்தேகம் - - - முகத்தில் தமிழன் மனம் வீச
கையிலிருந்த புத்தகம் காட்டியது நான் ஒரு தமிழன் என்று
(கரங்களில் புத்தகத்தை பற்றியிருந்தது வேறுயாருமல்ல நம்ம மூரனேதான். இப்படி அவருக்கு மட்டும் தானே முடியும் என்று சொல்லுறாங்க உண்மையா?)

ஒருவாறு இருக்கிறம் அலுவலகத்தை அடையாளம் காணமுன்
பேருந்திலிருந்து இறங்கியதும் யோவாய்ஸ், மருதமூரன், சிந்தனை சிறகினிலே பாப்பா போன்றோருடன் இந்த நமக்காக நாயகன் தன்னை அடையாளமிட்டுக்கொண்டேன். மெல்ல மெல்ல. .....
தன்அடிகளை எதிர்பார்ப்போடு
அச்சுவலை சந்திப்பை நோக்கி நகர்த்தினேன் அந்த அறிமுக பதிவர்களோடு..

பெரியோர்களின் ஏற்பாடு என்பதால்
நேர முகாமையை கருத்தில் கொண்டே
சந்திப்பு தொடங்க பத்து நிமிடங்கள் முன்பே
அவ்விடத்தை அடைந்தேன். இருப்பினும் நேரத்திற்கான வேலை நடந்ததா
என்பது வந்த உங்களுக்கு தெரியும் ...ம் ம் ம் ?

வெளியிலிருந்து எட்டி பார்க்கும் போது
ஆங்காங்கே இருக்கிறம் சஞ்சிகையின் விளம்பரங்கள்
சூழலை அலங்கரிக்க அதோடு இணைந்து இனிமையான இசை
செவிகளை வருட எனது எதிர்பார்ப்பு பல மடங்காகியது..


அதனிடையே வருணபகவான் தன் கைவரிசையை காட்ட எத்தணித்துவிட்டான்
மழைத்துளிகளின் தூரலே எங்களை உள் அழைத்தது வாசலில் இருந்த எங்களை
திருவடிகளை எடுத்து வைத்ததுமே என்னுள் சந்தேகம் அச்சுவலை சந்திப்பு இங்குதானா என்று, காரணம் ஏற்பாடுகளை பெரிதளவாக யோசித்துவிட்டேன்.
(நாங்கள் சென்றபோது தான் தங்களது ஆயத்தங்களை செய்து கொண்டிருந்தார்கள். என்னென்றால் நேரத்திற்கு நாம் வேலை செய்து பழக வேண்டுமல்லாவா )

ஏதோ அதுவம் அனுபவமே, பின் அது படிப்பினையாகலாம் .
புது புது முகங்கள் இச்சந்திப்பில்
அதிலும் அனுபவம் வாய்ந்த முக்கியமான முக்கியஸ்த்தர்கள்
அனைவரோடும் சந்திக்க இந்த சந்திப்பு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது
அதற்கு நான் நன்றிகளை மீ்ண்டும் மீண்டும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

(குறிப்பாக ஒலிபரப்பாளனாக வேண்டும என்ற இலட்சியம் கொண்ட எனக்கு அதிகளவான மூத்த, முதன்மையான ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாட கிடைத்தது இரட்டிப்பான மகிழ்ச்சியே.)

சந்திப்பின் சடுதியில் எமக்கு
தாக சாந்தி பின்னால் ஒழுங்கு செய்ய
தாகமாய் இருந்த என்னை ஒரு சாந்தி (பெண்)
அழைக்க நானும் சென்றேன் (யோவ் என்ன டீப்பா யோசிக்கிறங்க ஜஸ்ட் தாகசாந்திக்கு சென்றென் அவ்வளவுதான்.)
பின்புறம் சென்றதுமே.. அதிர்ச்சியாகிவிட்டேன் (காரணம் தெரியும் என்று நினைக்கின்றேன்)
அதிர்ச்சியை காட்டிக்கொள்ளாமல் இருந்த ஆகாரத்தை உண்டு தண்ணீர் பருக பக்கத்தில் இருந்த
மதிப்புமிக்க ஆசான் திரு. வித்தியாதரன் என் அருகில் நிற்க மெதுவாக என்னை அறிமுகம் செய்து கொண்டேன் சிரித்த முகத்தோடு அன்போடு பழகிய அந்த வரலாற்று மனிதரோடு நின்று
புகைப்படம் எடுத்தபோது
சிரித்துக்கொண்டே சொன்னார் ''தம்பி என்னோடாயா படம் எடுக்குறீங்க என்று"
அதன் பின்புலம் தெரியும் தானே....
(எந்தளவுக்கு எங்ளது இருப்பு இருக்கின்தறது என்றது நினைக்க கவலையே )

இணையத்தொடர்பில் எதிர்பார்க்காத
சிலரின் உரையை கேட்க
பூரித்துப்போனேன்.....
அவ்வாறே நேரம் நகர நகர சூரியன் தன் அன்றைய நாளின் இருப்பை
மறுப்பக்கம் நகர்த்த இருள் சூழ்ந்தது...
இடைநடுவே சிலர் விடைபெற
நானும் ஒரு கனம் யோசித்தேன்
செல்லமுடியாமல் சிலரின் உரைகளும்
பதிவர்களின் நட்பும் தடுத்தன.

அன்றைய தினத்தை நான்
பயனாக்கிக் கொண்டேன்
மற்றவர்கள் எப்படியோ......
ஒருவாறு சந்திப்பு இனிதே முடிய
நண்பர்களான புதிய மலையக பதிவின் சொந்தகாரர்
இரக்குவானை நிர்ஷனும், அருண் பிரசாத்தும் (வெற்றி எபெம்) வழியனுப்ப
மீண்டும் சந்திப்போம் என்று விடைபெற்றோம்.
இரவோடு இரவாக வந்தேன்பண்டாரவளை பூனாகலைக்கு

(என்ன ஒரு ஏக்கம் யோவொய்ஸ் அண்ணாவுக்கு பேருந்தில் ஏற்பட்ட அந்த அனுபவம் எனக்கு ஏற்படவில்லையே - இது தான் சொன்னாங்களோ எட்டாத பழத்திற்கு கொட்டாவி விடாகூடாது என்று)

Saturday, October 31, 2009

தேசியத் தன்னுரிமையே வரலாற்று வழித் தீர்வுஎன்ன்
திடீரென்று தொர..தேசிய தன்னுரிமையலாம் பற்றி பேசுது அப்படினுதானே நினைக்கிறிங்க. ம் ம் ம் .. அன்மையில படித்த இந்த விடயத்தை உங்களோடு பகிர்ந்துக்கொள்கின்றேன் அவ்வளவுதான் .

வரலாறு ஓர் உண்மையைப் பதிவு செய்திருக்கிறது.அது விடுதலை கோரும் ஓரினம் தன் இலக்கை அடையும் வரை ஓயாது என்பதுதான். போராடும் ஓரினம் சில களங்களை இழக்கலாம். பேரிழப்புகள் ஏற்படலாம். ஆனால் அது ஒருபோதும் ஓய்ந்து போவதில்லை.

கி.பி.முதல் நூற்றாண்டில் ரோமானியர்களிடம் நாடிழந்த யூதர்கள் 1948-ல் தங்களுக்கான நாட்டைப் படைத்துக்கொண்டார்கள். கி.பி.12- ம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆளுகைக்குக் கீழ் வந்த அயர்லாந்தியர் 1922-ல் விடுதலை பெற்ற அயர்லாந்தைப் பெற்றனர், கி.பி.18-ம் நூற்றாண்டில் மும்முறை ஐரோப்பிய வல்லாதிக்க அரசுகளால் பங்கிடப்பட்டு விழுங்கப்பட்ட போலந்து 1918-இல் மீண்டும் விடுதலை பெற்ற தேசமாக பிறப்பெடுத்தது.

தொன்மை வரலாற்றுப் பாரம்பரியம் மிக்கத்தமிழினம் - இரண்டு தேசிய இனங்களாக, தமிழ்த்தேசிய இனம் மற்றும் ஈழத்தமிழ்த்தேசிய இனம் - வேற்றினத்தின் ஆளுகையில் வீழ்ந்து கிடக்கிறது. விடுதலைக்குப் போராடிய ஈழத்தேசிய இனம் இந்திய - சிங்கள வஞ்சகக் கூட்டணியால் வீழ்த்தப்பட்டிருக்கிறது. தமிழகத் தமிழ்த் தேசிய இனம் இந்தியத்துக்கு அடிமையாக இருந்து ஏவல் செய்து ‘கொசுறுப்’ பதவிகள் பெறுவதில் சுகம் காணுகிறது. ஆனால், தமிழகத்தில் தேசிய இன விடுதலை உணர்வு வளர்நிலையில் உள்ளது. ஈழத்தில் அடக்கவொன்னா வீச்சுடன் மீண்டும் எழும் நிலையில் உள்ளது.

தேசிய இனங்களின் பிறப்புரிமை – தன்னுரிமை

உலகெங்கும் மக்கள் சமூகங்களாக வாழ்கிறார்கள். அவர்கள் அரசியல் பூர்வமாக தனித்தனி தேசங்களாக அல்லது தேசிய இனங்களாக வாழ்கிறார்கள். மனித சமூகங்கள் வரலாற்றுப் போக்கில் தேசியம் இனம் என்ற அரசியல் அலகுகளாக மாறுகின்றன. ஒரு தேசிய இனம் என்பது வரலாற்றின் விளைபொருள். J.V..ஸ்டாலின் ஒரு தேசம் என்பது நான்கு அடிப்படைக் கூறுகளைக் கொண்டிருக்கும் ஒரு மக்கள் சமூகம் என வரையறுத்தார். ஒரு பொதுமொழி, ஒரு தொடர்ச்சியான வரையறுக்கப்பட்ட நிலப்பகுதி, ஒரு பொதுவான பொருளாதார வாழ்வு, பொதுப்பண்பாட்டில் வெளிப்படும் ‘தாம் ஓரினம்’ என்ற உளவியல் இவற்றைக் கொண்டிருக்கும் வரலாற்றுப் போக்கில் உருவான மக்கள் சமுதாயமே ‘தேசம்’ அல்லது ‘தேசிய இனம்’ (Nation) ஆகும்.

இடைக்கால நிலப்பிரபுத்துவத்தின் அழிவில் முதலாளிய வகுப்பின் ஆதரவுடன் நவீன காலத் தொடக்கத்தில் (கி.பி.15-ம் ஆம் நூற்றாண்டு) முடிமன்னர்களின் தலைமையில் தேசங்கள் தோன்றின மன்னராட்சி தேசங்கள் பின்னர் 18-ம் நூற்றாண்டில் மக்களாட்சி தேசங்களாக மாறின. ஒவ்வொரு தேசமும் அல்லது தேசிய இனமும் தனக்கான தேசத்தை (Nation – State) படைத்துக்கொண்டது. தேசங்கள் - இறையாண்மை - தன்னுரிமை (National Self –determination) ஆகியவை உடன் பிறப்புகள். தன்னுரிமை அல்லது சுயநிர்ணய உரிமை ( Right to Self- Determination) என்பது ஒரு தேசிய இனத்தின் இறையாண்மை. ஒரு தேசிய இனம் தன்னுடைய அரசியல், பொருளியல், சமூக, பண்பாட்டு வாழ்வு நிலையைத் தானே முடிவு செய்து நடைமுறைப்படுத்திக் கொள்ள உரிமை பெற்றுள்ளது. அதன் அடிப்படையில்தான் இன்று ஐரோப்பா முழுவதும் தேசிய இன நாடுகளாக (Nation – State) உருவாகியுள்ளது. தனக்கான சுதந்திரமான நாட்டைப்படைத்துக் கொள்ள ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் உரிமை உண்டு. ஒவ்வொரு தேசிய இனமும் இறையாண்மை உடையது. ஒரு தேசிய இனம் விரும்பினால் தனி நாடாகவும் இருக்கலாம், அல்லது தனது பிரிந்துபோகும் உரிமையுடன் ஒரு கூட்டாட்சியில் பங்கு பெற்றிருக்கலாம்.

‘தன்னுரிமை’ என்பது ‘தன் தீர்மாணிப்பு உரிமை’ தனது அரசியல் கதி போக்கை ஒரு தேசிய இனம் தன் விருப்பப்படித் தீர்மானித்துக்கொள்வது என்று பொருள். ஒரு தேசிய இனம் தனித்து தேசிய அரசும் அமைத்துக் கொள்ளலாம் அல்லது அந்த உரிமையைக் கைவிடாமல் பிற தேசங்களுடன் சேர்ந்து ஒரு அரசின் கீழ் வாழவும் முடிவெடுக்கலாம். தன்னுரிமை ( சுயநிர்ணய உரிமை) என்பதன் பொருள் ஓரினத்தை இன்னோர் இனம் ஆளக்கூடாது என்பதுதான்.

தன்னுரிமை இல்லாமல் ஒரு தேசிய இனம் இருக்க முடியாது. அது தேசிய இனத்துடன் உடன் பிறந்தது. ஒரு தேசிய இனம் தனது இறையாண்மையைப் பயன்படுத்தி அது தன் அரசியல் கதிபோக்கைத் தானே நிர்ணயித்துக் கொள்கிறது. சனநாயகம் , தேசங்களின் இறையாண்மை, தன்னுரிமை ஆகியவை ஒன்றோடொன்று தொடர்புடையவை இவற்றில் எந்த ஒன்று மறுக்கப்பட்டாலும் மற்றவை மறுக்கப்பட்டவை ஆகிவிடுகின்றன.

ஒரு பல்தேசிய இன நாட்டில் இருக்கும் ஒரு தேசிய இனத்தின் ‘பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை’ ஏற்கப்பட்டால் மட்டுமே, அத்தேசிய இனம் தனது இறையாண்மையுடனும், சனநாயக உரிமையுடனும் இருப்பதாகப் பொருள்படும்.

ஒரு பெருந்தேசிய இனம் ஒடுக்குமுறையை வெளிப்படையாகவோ அல்லது நுட்பமாகவோ செயல்படுத்தும். மேலோட்டமாகப் பார்க்கையில் சனநாயக உரிமைகள் அனைவருக்கும் அளிக்கப்பட்டுள்ளது போலத்தோன்றும். ஆனால் சிறிய தேசிய இனங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு ஒடுக்கப்படும். சிறு தேசிய இனத்தைச் சேர்ந்த மக்களுக்கு தனிமனித உரிமைகளை அளிப்பது, அதே நேரம் அந்த சமூகத்திற்கான (தேசிய இனத்துக்கான) உரிமைகளை மறுப்பது என்பது சனநாயக மறுப்பே ஆகும். ஏனெனில், மக்கள் சமூகம் என்பது உதிரிகளான தனிமனிதர்கள் அல்ல. அது ஒரு ‘கூட்டு உடல்’ (Collective Personality) தனி மனிதனுக்கு ஒரு வாழ்க்கை இருப்பது போலவே, ஒரு தேசிய இனத்துக்கும் ஒரு அரசியல் வாழ்வு இருக்கிறது. ஒரு தேசிய இனம் சனநாயகத்தை அனுபவிக்கும்போது, அதன் ஒவ்வொரு உறுப்பினனும் உரிமைகளை அனுபவிக்கிறான். அத்தேசிய இனத்தின் உரிமை பெற்ற அரசியல் வாழ்வு பறிக்கப்படும்போது, அந்த தேசிய இனத்தின் ஒட்டுமொத்த மக்களும் உரிமை இழக்கிறார்கள்.

தன்னுரிமைக் கோட்பாட்டின் வரலாறு

தேசங்கள் உருவானபோது தன் தீர்மானிப்பு உரிமையையும் பயன்படுத்தும் போக்கும் தொடங்கியது. ஒரு தேசிய இனத்துக்கு ஒரு நாடு என்பதுதான் தற்கால அரசமைவு முறை(Modern State System) ஆகும். இவற்றுக்கிடையில்தான் பன்னாட்டு உறவுகள் நடத்தப்படுகின்றன. இந்த தேசிய அரசுகள் முறை ஐரோப்பாவில் முப்பதாண்டுப்போர் (1618-1648 கி.பி) முடிவடைந்த பிறகு தொடங்கியது. முப்பதாண்டுப்போர் என்பது கத்தோலிக்கர்களுக்கும் புராட்டஸ்டண்டு இளவரசர்களுக்கும் இடையே ஐரோப்பாவில் நிகழ்ந்த இறுதிப்போர். போரின் இறுதியில் 1648-ம் ஆண்டு வெஸ்ட்பாலியா சமாதானம் (Peace of Westphalia) ஏற்பட்டது. மதச்சீர்திருத்தக் காலத்தின் முடிவையும், அரசியல் புரட்சிக்காலத்தின் தொடக்கத்தையும் இந்த ஒப்பந்தம் குறித்தது.

ஐரோப்பிய நாடுகள் பங்கேற்ற இந்த முப்பதாண்டுப் போரின் விளைவாக புனித ரோமானியப் பேரரசு (Holy Roman Empire) நடைமுறையில் முடிவுற்றது. புனித ரோமானியப் பேரரசில் அடங்கியிருந்த 343 அரசுகள் ஆட்சி உரிமை பெற்றன. சமயம் சார்ந்த அரசியல் வலுவிழந்தது. சமயப் சார்பின்மை என்பது அரசுகளின் புதிய கோட்பாடானது. தற்கால அரசுமுறை (Modern State System) இப்போது தொடக்கம் கண்டது. ஐரோப்பாவில் அரசுகள் ஒன்றைவிட மற்றொன்று தாழ்ந்தது அல்ல என்ற புரிதல் இதற்கு அடிப்படையானது. முன்பு புனித ரோமானியப் பேரரசே ஏனைய தேசிய அரசுகளை விட உயர்ந்தது எனக் கருதப்பட்டது. ஆனால், இதன்பிறகு பேரரசும் ஓர் ஐரோப்பிய அரசே மற்ற அரசுகளை விட அது உயர்ந்தது அல்ல என்ற எண்ணம் எழுந்தது.

வெஸ்ட்பாலியா அமைதி ஒப்பந்தம் பல புதிய அரசுகளை உருவாக்கியது. டச்சு குடியரசுக்கு ஒரு நூறு ஆண்டு போராட்டத்திற்குப்பின் ஏற்பளிக்கப்பட்டது. ஹேப்ஸ்பர்க் அரச வம்சத்தை எதிர்த்து 400 ஆண்டுகாலம் போராடிய சுவிஸ் இப்போது விடுதலை அடைந்தது. இப்போது ஒவ்வொரு ஜெர்மானிய சிற்றரசின் இறையாண்மையும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அவை தங்கள் அரசியல் நிலையைத் தாங்களே தீர்மானித்தன.

‘ இறையாண்மையுள்ள சுதந்திர நாடுகள்’ என்ற அடிப்படையில் ஐரோப்பா மாற்ற மடையத் தொடங்கியது. இதன் அடிப்படையிலேயே புதிய பன்னாட்டுச் சட்டங்கள் எழுதப்பட்டன. அதன் அடிப்படையாக , 17-ம் நூற்றாண்டில் (முப்பது ஆண்டுப் போர் நடக்கும் காலத்திலேயே), ஹுகோ குரோஷியஸ் (Hugo Grotius). ‘போர் மற்றும் அமைதிக்கான சட்டம் பற்றி (On the Law of War and Peace) என்ற நூலை எழுதினார்.

1648- ஆம் ஆண்டின் வெஸ்ட்பாலியா உடன்பாட்டிலேயே தன்னுரிமை (Right to self determination) பற்றிய சில குறிப்புகள் உள்ளன. இக்காலக்கட்டத்தில், தேசியம் என்ற உணர்வு ஒரு இன மக்களை ஒரு நாட்டுடன் இணைத்து அடையாளப்படுத்தியது.

இக்காலக்கட்டத்தில் அரசியல் சிந்தனையாளர்களின் சிந்தனைகள் இப்போக்கை ஊக்குவித்தன. ஆங்கில அரசியல் சிந்தனையாளர் ஜான்லாக் (John Lock 1632 –1704) வாழ்வதற்கான உரிமை இயற்கையானது சுதந்திரம்சொத்துரிமை மற்றும் மனித உரிமைகளைக் காப்பதற்காகவே அரசுகள் உருவாக்கப்பட்டன. மக்களே அரசுகளை உருவாக்கினர். கடமை தவறுமானால் அந்த அரசுகளை மக்கள் நீக்கலாம் என்றார். இதுவே சனநாயகத்தின் அடிப்படை.

இக்கருத்து அமெரிக்க விடுதலைப் போரின் மீது (1775-1783) பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அமெரிக்க விடுதலைத் தலைவர்களுள் ஒருவரான ஜெபர்சன் (Jefferson) மீது ஜான் லாக்கின் கருத்து தாக்கத்தை ஏற்படுத்தியது. அவரால் வடிவமைக்கப்பட்ட அமெரிக்க விடுதலைப்பிரகடனம் (Declaration of Independence –4 July 1776) இவ்வாறு அறிவித்தது:

"ஆளப்படுவோரின் ஒப்புதலில் இருந்தே அரசுக்கு நியாயமான அதிகாரம் கிடைக்கிறது. இந்த இலக்குகளிலிருந்து ஒரு அரசுமுறை மாறுமானால், அந்த அரசை மாற்றுவது அல்லது அழிப்பது மற்றும் புதிய அரசை நிறுவுவது என்பது மக்களின் உரிமை"

இதுவே ஒரு மக்களின் தன்னுரிமை (Self Determination). இது மேலும் பரிமாண வளர்ச்சி பெற்றது. பிரெஞ்சுப் புரட்சியில் (1789) ‘மக்களின் இறைமைக் கோட்பாடு’ (Doctrine of Popular –Sovereignty) உயர்த்திப் பிடிக்கப்பட்டது. பிரெஞ்சு சிந்தனையாளரான ரூசோ (Rousseau 1712-1778) ‘மக்கள் சமூகம் ஒரு சமுதாய ஒப்பந்தத்திற்கு வந்தது. இதனால் ஓர் அரசியல் சமூகம் உருவாக்கப்பட்டது அதன் ‘பொது விருப்பம்’ (General Will) இறையாண்மை உடையது. இறையாண்மை (Sovereignty) மிக்க ‘பொது விருப்பம்’ அரசை உருவாக்கியது. அந்த அரசு மக்களுக்கு தொண்டாற்ற வேண்டிய முகவர் மட்டுமே. அதை எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம்’ என்றார்.

பிரெஞ்சுப் புரட்சி இவ்விதம் மக்களின் இறையாண்மையையும் தன்னுரிமையையும் இணைத்தது. தன்னுரிமையைப் பயன்படுத்தும் திட்டமாக கருத்துக் கணிப்பு (Plebiscite) என்ற சனநாயக முறையையும் புகுத்தியது. பிரெஞ்சுப் புரட்சியின் போது கூட்டப்பட்ட தேசிய அவை (National Assembly) பிரான்சின் அரசியலமைப்பைத் தீட்டுமுன் ‘மனிதன் மற்றும் குடிமகன் இவர்களின் உரிமைகளின் அறிக்கை’ (Declaration of Rights of man and Citizen –1789) என்ற பிரகடனத்தை வெளியிட்டது. அது மனிதர்களின் சமத்துவத்தையும், இறையாண்மை நாட்டுமக்களிடமே இருக்கிறது என்ற கருத்தையும் வலியுறுத்தியது. மக்களின் இறையாண்மை தன்னுரிமையாக வெளிப்பட்டு அரசுகளைத் தெரிவு செய்தது.

பிரெஞ்சுப் புரட்சியும், அடுத்து ஆட்சிப்பொறுப்பை கைக்கொண்ட நெப்போலியன் போன பார்ட்டின் நாடு விழுங்கும் பேரரசுக் கொள்கையும் தேசிய இன உணர்வை உசுப்பின.ஸ்பெயின், போலந்து, ரஷ்யா, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் தேசிய இன விடுதலை உணர்வு கிளர்ந்தது. இவ்வுணர்வு இத்தாலியிலும், ஜெர்மனியிலும் பிரெஞ்சு ஆதிக்கத்திற்கெதிராக எழுந்தது. இத்தாலிய ஐக்கியம், ஜெர்மானிய ஐக்கியம் (1871) ஆகியவை சாதிக்கப்பட்டன.

தேசிய இனங்கள் தனித் தேசங்களைப் படைத்தபோதெல்லாம் தன்னுரிமைக் கோட்பாடு செயல்படுத்தப்பட்டது. 1820 களில் நடைபெற்ற கிரேக்க விடுதலைப்போரில் தன்னுரிமைக் கோட்பாடு செயல்பட்டது. 1830-இல் பெல்ஜியமும், அதன்பின் ஸ்பானிய அமெரிக்கக் குடியேற்றப்பகுதிகளும் தன்னுரிமை அடிப்படையிலேயே விடுதலை பெற்றன. ஐரோப்பாவில் வெடித்த 1848-ஆம் ஆண்டுப் புரட்சி பிரான்சு முதல் பல நாடுகளில் மாற்றங்களை விளைவித்தது. இப்புரட்சியின்போது தேசிய இனங்கள் தங்களுக்கென தனி தேசங்களை நிறுவ முயன்றன. இக்காலக் கட்டத்தில் தன்னுரிமைக் கோட்பாடு ஒவ்வொரு மக்களையும் ஓர் இனவழிச் சமூகமாக (Ethnic Entity) காணும் போக்கு வளர்ந்திருந்தது. இச்சமூகங்கள் தங்களுக்கான தனித்தனி நாடுகளுக்கு உரிமையுடையவை என்ற பார்வையும் வளர்ந்திருந்தது. இவ்வாறு தன்னுரிமைக் கோட்பாடு வலிமை பெற்று வந்தது.

ஆனால், இராணுவ ரீதியில் வலிமை பெற்ற இனங்கள் தன்னுரிமையை நடைமுறைப்படுத்திக்கொண்டன. உதாரணமாக இத்தாலியும், ஜெர்மனியும் சிறிய தேசங்களான டேனியர், செக்குகள், சுலோவக்குகள், குரோட், சுலேவென்கள் -ஆகியவற்றின் தன்னுரிமை கோரிக்கைளாக இருந்தன.

1896-ஆம் ஆண்டு ஜுன் 21 முதல் ஜுலை 1 வரை இலண்டனில் நடைபெற்ற கம்யூனிஸ்ட்டுகளின் இரண்டாவது அகிலத்தின் (Second International Congress) நான்காவது பேராயத்தில் தேசிய இனங்களுக்கான தன்னுரிமையை ஆதரித்து கம்யூனிஸ்ட்டுகள் தீர்மானம் இயற்றினர். முதல் உலகப்போர் (1914- 1918) மற்றும் இரண்டாம் உலகப்போர் (1939-1945) ஆகிய போர்களுக்கு சிறு தேசங்களின் தன்னுரிமைகள் மிதிக்கப்பட்டமையும் காரணமாகும். ஆகவேதான் உலக அமைதியைப் பேணுவதற்காக முதல் உலகப்போருக்குப்பின்னும், இரண்டாம் உலகப்போருக்குப்பின்னும் தேசங்களின் தன்னுரிமை பிரகடனங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டன.

முதல் உலகப்போர் (1914 - 1918) முடிவடைந்ததும் பல நாடுகள் தன்னுரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில் விடுதலை பெற்றன. பேரரசுகளான ஜெர்மனி, ஆஸ்திரியா, துருக்கி, ரஷ்யா ஆகியவை பல பகுதிகளை இழந்தன.

மத்திய ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு ஐரோப்பாவில் புதிய தேசிய இன அரசுகள் தோன்றின. அவை பின்லாந்து, எஸ்தோனியா, லாட்வியா, லித்துவேனியா, போலந்து, செக்கோஸ் லோவேகியா, யூகோஸ்லாவியா ( பல தேசிய இனங்கள்).
முதல் உலகப் போருக்குப்பின், ‘தேசிய இனங்களின் இறையாண்மையுள்ள ஆட்சியும், அவற்றில் சனநாயகமுறைமையும்’ என்ற புதிய போக்கு பரவியது. பலநாடுகள் தன்னுரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில் விடுதலை பெற்றன. 1914-இல் ஐரோப்பாவில் 19 நாடுகள் இருந்தன. 1919-இல் இது 26 ஆக உயர்ந்தது. தேசிய இனத் தன்னுரிமைக் கோட்பாட்டின் பயன்பாடு நாடுகளின் எண்ணிக்கையை உயர்த்தியது.

முதல் உலகப் போருக்குப்பின் உலக அமைதியைப் பேணுவதற்காக பன்னாட்டு மன்றம் (League of Nations) உருவாக்கப்பட்டது. அதற்கு முன்னோடியாக 1918-இல் ‘The League of Free Nations Association’ உருவானது. அமைதியை விரும்பிய தலைவர்கள் ‘நாடு’ (State) என்ற சொல்லுக்குப் பதில் ‘தேசம்“ (Nation) என்ற சொல்லையே பயன்படுத்தினார்கள்.

20-ம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் தேசங்களின் ‘தன்னுரிமை’க்கு உரிய மதிப்பு தரப்பட்டது. 1917-இல் அக்டோபர் புரட்சியை நடத்து முன் தேசிய இனங்களின் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையை லெனின் உறுதி செய்தார். 1918-இல் வரையப்பட்ட சோவியத் யூனியனின் அரசியல் அமைப்புச் சட்டம் , பிரிந்து செல்லும் உரிமையை ஏனைய குடியரசுகளுக்கு உறுதி செய்தது.

தேசிய இனங்களின் பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையை ஆதரிக்கும் நிலையில் லெனின் புதிய திசைவழிகளைக் காட்டினார். ‘தேசிய இன முரண்பாடுகள் ஒடுக்குமுறை வடிவம் பெறும்போது, விடுதலை என்ற வடிவம் தாங்கும் நிலை ஏற்படுகிறது’ என்றும் பிரிந்துபோகும் உரிமை என்பது அனைத்து அசமத்துவங்களையும் தனி ஆதிக்க உரிமைகளையும் அகற்றுவது என்றும் கருத்தறிவித்தார். 1917 அக்டோபர் புரட்சிக்குப்பின் பிரிந்து செல்ல விரும்பிய பின்லாந்து மிகுந்த மதிப்புடன் பிரிந்து போக ஆவன செய்தார்.

லெனின் இவ்வாறு கருத்தறிவித்தார். "சுய நிர்ணய உரிமையையோ பிரிந்து போகும் உரிமையையோ மறுப்பதானது ஆதிக்க தேசிய இனத்தின் தனியுரிமைகளை ஆதரிப்பது என்றே தவிர்க்க முடியாதபடி பொருள்படும்" (லெனின் , தேசிய இனப் பிரச்சினைகளும், பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதமும் (1969)1987 முன்னேற்றப்பதிப்பகம், பக்-34)

முதல் உலகப் போருக்குப்பின்னும் , போர் நடக்கும்போதும், அமெரிக்கக் குடியரசுத்தலைவர் உட்ரோவில்சன் தேசியத் தன்னுரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில் தனியரசுகள் அமைவதை வலியுறுத்தினார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் இவ்வாறு அறிவித்தார். "மக்களும் மாகாணங்களும் ஓர் இறையாண்மைக்கும் மற்றொரு இறையாண்மைக்குமிடையே பண்டமாற்று செய்யப்பட வேண்டியவை அல்ல, ஏதோ கால்நடைகளைப் போல அல்லது சதுரங்க விளையாட்டில் காய்கள் போல, மக்களுடைய ஒப்புதல் மட்டுமே மக்களை மேலாண்மை செய்க்கிறது மற்று்றும் ஆளுகிறது என்று கூறிவிட முடியாது. தன்னுரிமை என்பது வெற்றுச்சொல்லாடல் அல்ல. அது உடன் செய்யப்பட வேண்டிய செயல்பாட்டுக்கான கொள்கை. அதை அரச தந்திரிகள் இனிமேல் தங்கள் பேரபாயத்தை எதிர்நோக்கியே அலட்சியப்படுத்துவார்கள்." (Quoted in V.D.Mahajan, Political Theory , S.Chand & Co., New Delhi, 1988, PP.154-155)

1918- இல் உட்ரோ வில்சன் தனது 14- அம்சக்கொள்கையை வெளியிட்டார். அதில் தேசிய இனத் தன்னுரிமையை ஆதரித்தார். ஆஸ்திரியா, பால்கன், போலந்து ஆகியவற்றுக்குத் தன்னுரிமை அடிப்படையில், தீர்வு காண வலியுறுத்தினார். உலக அமைதிக்காக பன்னாட்டு (பல்தேச) மன்றத்தை அமைக்க அவரே 14 அம்சக் கொள்கையில் வலியுறுத்தினார்.

தன்னுரிமைக் கோட்பாட்டை அரசியல் உண்மை இருப்பாக மாற்ற பன்னாட்டு மன்றம் தேவை என்று கருதினார். இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் நட்பு நாடுகளால் 1941 -ஆம் அண்டு ஆகஸ்ட் 14 அன்று அட்லாண்டிக் சாசனம் ( Atlantic Character) வெளியிடப்பட்டது. அது, அனைத்து மக்களுக்கும் தங்களுக்கான அரசை தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு என்று அறிவித்தது. இரண்டாம் உலகப்போருக்குப்பின் தன்னுரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகள் பல விடுதலை அடைந்தன.

1942 சனவரிமாதம் 26 நாடுகள் ஐக்கிய நாடுகள் பிரகடனத்தில் கையொப்பமிட்டன. அப்பிரகடனம் அட்லாண்டிக் சாசனம் கூறும் தன்னுரிமையை ஏற்றுக்கொண்டது. இரண்டாம் உலகப்போருக்குப் பின் பல உலகப் பிரகடனங்களும் ஆவணங்களும் தேசிய இனத் தன்னுரிமைக்கு ஏற்பளித்திருக்கின்றன.

ஐக்கிய நாடுகள் சாசனம் -1945 கூறு 1(2) :
"மக்கள் இனங்களுக்கு உரிய தன்னுரிமை (Self determination) மற்றும் சமத்துவ உரிமைகள் ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் தேசங்களுக்கு இடையில் நட்புறவை வளர்த்தல் மற்றும் உலக அளவில் அமைதியை வலுப்படுத்த தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்"
Article 1(2)
“To develop friendly relations among nations based on respect for the principle of equal rights and self – determination of peoples, and to take other appropriate measures to strengthen Universal peace”

பொருளாதார , சமூக, பண்பாட்டு உரிமைகளுக்கான பன்னாட்டு ஒப்பந்தம் (InternationalCovenant on Economic, Social andCultural Rights-1966) இவ்வாறு குறிப்பிடுகிறது:

அனைத்து மக்கள் இனங்களுக்கும் தன்னுரிமை (சுயநிர்ணய உரிமை) உண்டு, அவ்வுரிமையை அவர்கள் பெற்றிருப்பதால், அவர்களுடைய அரசியல் தகுநிலையை சுதந்திரமாக அவர்கள் தீர்மானிக்கிறார்கள். அவர்களுடைய பொருளியல், சமூக, பன்பாட்டு வளர்ச்சியை சுதந்திரமாக முன்னெடுக்கிறார்கள்" (All peoples have the right of self – determination. By virtue of that right they freely determine their political status and freely pursue their economic, social and cultural development).

தன்னுரிமை ஏற்பளிப்பின் காரணமாக 1946 முதல் 1960 வரை 37 புதிய தேசங்கள் தோன்றின. 1991-இல் பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய 15 குடியரசுகள் சோவியத் யூனியனிலிருந்து வெளியேறின. 1990- இல் தன்னுரிமை அடிப்படையில் யூகோஸ்லாவியா உடைந்து தேசிய இனங்கள் வெளியேறின. இன்றளவும் பல தேசிய இனங்கள் தங்கள் தன்னுரிமையை ஏற்கவேண்டும் எனக்கோரிப் போராடி வருகின்றன.

தன்னுரிமைக்கு உரிமை பெற்ற ‘மக்கள்’ (A People) யார்?

தேசிய இனத் தன்னுரிமையை உறுதிசெய்யும் உலக ஒப்பந்தங்களும் பிரகடனங்களும் அதற்கு தகுதியானவர்களை ‘A People’ என்றும் அத்தகைய தேசிய இனங்களை ‘Peoples’ என்றும் அழைக்கின்றன. இன்று ஈழத்தேசிய இனம் தன்னுடைய தன்னுரிமையை ஏற்பளிக்கக் கோருகிறது. தன்னுரிமை பெற ‘a People' என்ற தகுதியை ஈழத்தமிழினம் நிறைவு செய்கிறதா?

‘ஒரு மக்கள்’ என்பது ஓர் எண்ணிக்கையுள்ள ஒரு கூட்டம். அது ஒரு பொதுவான நிலப்பகுதியில் வாழ்வதாகவும், தேசிய, பண்பாட்டு, மொழி, சமய இணைப்புகளோடு, அரசு அதிகாரமும் கொண்டிருக்கும். அவ்வாறு கருதப்படும் மக்கள், தெளிவான அடையாளத்துடன், தனித்துவப் பண்புகளுடன், ஒரு நிலப்பகுதியுடன், உறவு கொண்ட ஒரு சமூகப் பருண்மை (Social Entity) (B.C.Nirmal, The Right to Self – Determination in International Law, New Delhi, 1999 P.119)

1981-ஆம் ஆண்டு இலங்கை இனப்பிரச்சினை குறித்து ஆய்வு செய்து 1983-இல் அறிக்கை அளித்த பன்னாட்டு நீதியாளர்கள் குழு ஈழத்தமிழர்களை ஒரு மக்கள் என அடையாளங் கண்டது. "தமிழர்களை ‘ஒரு மக்கள்’ என்று கருதலாம். அவர்களுக்கு என்று ஒரு தனித்துவமான மொழி, பண்பாடு, ஏனைய பெரும்பான்மை மக்களிடமிருந்து மாறுபட்ட ஒரு தனியான சமய அடையாளம், ஒரு குறிப்பிட்ட அளவிலான வரையறுக்கப்பட்ட நிலப்பகுதி ஆகியவை இருக்கின்றன" (Vinginia A. Learny , Ethnic Conflict and Violence in Sri Lanka, International Commission of Jurists, Genera, 1981, P.69).

ஈழத்தமிழினத்தின் தன்னுரிமைக் கோரிக்கை

பன்னாட்டு ஒப்பந்தங்கள் பேசும் அனைத்துத் தகுதிகளையும் நிறைவு செய்யும் ஈழத்தமிழினத்தின் தேசிய இனத் தன்னுரிமை ஏற்பளிக்கப்பட வேண்டும். அதற்கான கோரிக்கையைத் தொடர்ந்து ஈழத்தமிழினம் எழுப்பி வந்திருக்கிறது. பிரச்சினை தொடங்கியபிறகு தன்னுரிமைக் கோரிக்கையை ஈழத்தமிழினம் தொடர்ந்து கீழ்க்கண்ட ஆவணங்களில் எழுப்பியிருக்கிறது.

• எஸ். கதிரவேற்பிள்ளை, கோப்பாய் நாடாளுமன்ற உறுப்பினர் (1973)

• தந்தை செல்வநாயகம் (1975)

• வட்டுக்கோட்டை தீர்மானம் (1976)

• தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் 1977 தேர்தல் அறிக்கை.

• ஆண்டன் பாலசிங்கம் அளித்த அரசியல்குடி அறிக்கை -1983.

• திம்பு பேச்சுவார்த்தையில் (1985) போராளி அமைப்டபுகளின் தீர்வுக் கோட்பாடு

• நீதிபதி பொன்னம்பலம் -1991

• விசுவநாதன் ருத்ரகுமாரன் -1991

• விடுதலைப்புலிகளின் அரசியல்குடி - 1991

• பன்னாட்டு கல்வி வளர்ச்சிக்குழு ஐ.நா.மனித உரிமை ஆணையத்துக்கு அளித்த அறிக்கை (1998).

தமிழகத்தின் தன்னுரிமைக்குரல்:

• 1938 தந்தை பெரியார் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று முழங்கி தமிழ்நாடு விடுதலைக் கோரிக்கையை தொடங்கிவைத்தார்.

• 1946இல் ம.பொ.சிவஞானம் தமிழகத்துக்குத் தன்னுரிமை கோரினார். இந்திய சுதந்திரக் கூட்டாட்சியில் தன்னுரிமை பெற்ற தமிழகக் குடியரசு என்று அவர் வெளியிட்டக் கூட்டறிக்கையில் தமிழகத் தலைவர்கள் பலரும் தமிழறிஞர்களும் கையொப்பமிட்டிருந்தனர்.

• 1961 செப்டம்பரில் ஈ.வெ.கி.சம்பத் தலைமையிலான தமிழ்த் தேசியக் கட்சி "மொழிவழித் தேசிய இனங்கள் ஒவ்வொன்றுக்கும் தன்னைத் தானே ஆண்டு கொள்ளும் பூரண சுதந்திரம், தம்மிச்சையாக ஒன்று கூடும் பிரிந்து போகும் உரிமையுடன் கூடியக் கூட்டமைப்பு" என்பதை முன் வைத்தது. • 1963இல் தென்மொழிக் கழகம் சார்பில் தமிழக விடுதலை உரிமை நாள் அறிவித்த பாவலரேறு பெருஞ்சித்தரனார் 1966 இல் தனிநாட்டுக் கோரிக்கையை முன் வைத்தார்.

• தோழர் தமிழரசன், புலவர் கலியபெருமாள் தலைமை தாங்கிய தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சி 1984 ஆம் ஆண்டில் தமிழ்நாடு விடுதலை கோரியது.

• 1990-இல் சென்னை பெரியார்திடலில் தமிழ்த்தேசப் பொதுவுடமைக் கட்சி தன்னுரிமை மாநாட்டைக் கூட்டி தமிழ்த் தேசத் தன்னுரிமை தீர்மானங்களை நிறைவேற்றியது.

• 1991-இல் பழ.நெடுமாறன் அவர்களின் தலைமையிலான தமிழர் தேசிய இயக்கம், தஞ்சை மாநாட்டில் தன்னுரிமைத் தீர்மானத்தை நிறைவேற்றியது.

• 1993-ல் தமிழர் தேசிய இயக்கம் தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி தமிழ் தமிழர் இயக்கம் ஆகியவை தமிழ்த்தேசத் தன்னுரிமை முன்னணியை அமைத்தன. தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் ஆகியவை தமிழ்த் தேசிய விடுதலையை முன்வைத்தன. வே. ஆனைமுத்து அவர்களின் தலைமையில் செயல்படும் மார்க்சிய பெரியாரியப் பொதுவுடைமைக்கட்சி ஆகியவை தமிழ்த் தேசியத் தன்னுரிமையை ஏற்றுள்ளன. மார்க்சிய - லெனினிய பொதுவுடைமைக்கட்சிகளும் வேறு அமைப்புகளும் தேசிய இனத் தன்னுரிமையை தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வாக வைக்கின்றன. உலகம் முழுவதும் பல தேசிய இனங்கள் தேசிய இனத் தன்னுரிமை கோரிக்கையை முன்வைத்துப்போராடி வென்றிருக்கின்றன. ஈழ தேசிய இனமும் தமிழ்த்தேசிய இனமும் எந்த அளவுகோல் வைத்து அளந்தாலும் தன்னுரிமை கோரத் தகுதி வாய்ந்த மக்களினங்கள் ஆகும். தமிழினத்துக்குத் தன்னுரிமை மறுப்பது வஞ்சகம்.


மேலதிக விடயங்களுக்கு இங்கு அழுத்தவும்

இது உங்கள்

:: ல்மவி : :


Thursday, October 29, 2009

உதவிக் கரங்களே உங்களின் பார்வையை என்மீது செலுத்துங்களேன்! !ஹாய் என் அம்மா அப்பா, சக அண்ணா அக்கா அனைவருக்கும் எனது சிரம்தாழ்நத வணக்கங்களை தெரிவிக்கின்றேன். நிச்சயமாக உங்களை நம்பி யான் உதவி கோருகின்றேன். நான் இலங்கையில் பதுளைமாகணத்தில் அமைந்துள்ள பண்டாரவளையிலிருந்து சுமார் 31கீலோமீற்றர்ஸ் தொலைவில் உள்ள உடஹென என்ற கிராமத்தில் வசித்து வருகின்றேன். எனக்கு காதில் கேட்கக்கூடிய ஒலி சாதரண மனிதனுக்க கேட்கக்கூடிய அளவினை விட அதிகமாக கேட்பதால் அப்படி சென்ற ஒலி எனது இதயத்தினை காதினை பாதித்துள்ளதால். எனக்கு எதிர்வரும் ஒரு மாதக்காலப்பகுதியுனுள் சத்திர சிகிச்சை செய்தாகவேண்டும் வைத்திய ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே இது தொடர்பாக வைத்தியர்கள் உறுதிப்படுத்திய கடிதங்ககளையும் இணைத்துள்ளேன். தயவுடன் அன்பு நெஞ்சங்களுக்கு நான் வாழும் எனது அடுத்த நிமிடம் உங்கள் கையில் தான் உள்ளது. அதாவது எனது சத்திரசிகிச்சைக்கு மொத்தமாக ஒரு இலட்சத்து எழுபத்தய்யாயிரம் ரூபாய்கள் செலவாகின்றதால் தயவுடன் உங்களால் இயன்ற பண உதவியை செய்து எனக்கு தந்துதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன். எனது சுயவிபரம் பற்றிய தகவல்களை கீழே தருகின்றேன். தாங்கள் வழங்கும் பணத்தினை நான் படிக்கும் பாடசாலையின் கணக்கு விபரத்திற்கு அனுப்புமாறு மிகச் செல்லமாக கேட்டுக்கொள்கின்றேன்.


பெயர் :- விஜயகுமார் கோகிலவானி

பிறந்த திகதி :- 18.06.2003

பாடசாலை முகவரி :- இல 0௨ தமிழ் வித்தியாலயம், பூனகாலை உ.த.க, பூனகாலை

வீட்டு முகவரி :- உடஹென பிரிவு ,
பூனகாலை உ.த.க, பூனகாலை

பாடசாலை கணக்கு இலக்கம் {கிராமிய வங்கி பூனாகலை} :- 7941

உங்களது உதவியில் என் எதிர்கால உதயத்தை காணவிரும்புகின்றேன்.

Tuesday, October 27, 2009

அழகியல் பற்றி மெய்யியல் பார்வைஎல்லாரையும் கும்பிறனுங்க . . என்னங்க ரொம்ப யோசனையா இருக்கிங்க..... யாராவது உங்களபார்த்து அழகுகும் உங்களுக்கும் சம்பந்தமே இல்லனு சொல்லிட்டாங்களா? கவலை உதரி தள்ளிட்டு இதை வாசித்து பாருங்களேன்.... உண்மை புரியும். சரி சரி யோசிங்க ஆனால்...இவன் இயம்புவதையும் கொஞ்சம் கேட்டால் என்னவாம்... இன்று அழகு பற்றி பார்ப்போமா? ? நாம எல்லாரும் சில விடயங்களை தெரியாமலே பண்ணிக்கொண்டு இருக்கின்றோம் . அது தெரியுமா உங்களுக்கு? அது தெரிஞ்சா ஏன் இங்கு இருக்கிறம் அப்படினு சொல்லுறது எனக்கு விளங்குது.. பார்கிற எல்லாவற்றையும் சிலர் வாவ் !எவ்வளவு அழகு ! என்று வியப்பார்கள்...நான் கேட்கிறன் அழகு என்றால்.. என்ன.. அவலட்சணம் என்றால் என்ன? எப்படி ஒன்றை பார்த்து அழகு என்று கணிப்பிடுவது...இப்படி எப்போதாவது யோசித்துள்ளீர்களா...... இந்த அழகு என்ற பதத்திற்கு நமது மெய்யியல் வாதிகள் என்ன சொல்லிறுக்காங்க என்று பார்ப்போமே . . .

அழகிற்கு அங்கிகரிக்கப்பட்ட ஒரு தனிப்பட்ட ஒரு தனிக் கொள்கை கிடையாது. அழகு எனும் பதம் மயக்கம் தருவதாகும். ஒழுக்கவியல், அளவையியல் பெளதீக அதீதம், அறிவாராட்சி போன்ற துறைகளை போலவே அழகியல் பிரச்சனைகளும் காலம் காலமாக ஆராயப்பட்டு வருகிறது 18ம் நூற்றாண்டுவரை அழகியல் என்ற பதம் கலைப்பற்றிய மெய்யியலாளர்களின் கட்டுரைகளில் இடம்பிடிக்கவில்லை. 1970ல் பவுன் கார்த்தே என்பவரை முதன் முதலில் கலை என்ற சொல்லுக்கு அழகு எனும் பதத்தை பயன்படுத்தினார். இங்கு அழகியலை மெய்யியல் ரீதியா ஆராயவுள்ளது எனவேதான் அழகியல் மெய்யியல் எனப்படுகிறது. இதனை கலைழகு பற்றிய தேடல் என்பர். காட்சிகளாலும் கற்பனைகளாலும் பெறக்கூடிய அநுபவமே அழகு. அழகை வெளிப்படுத்துவன கலைப்பொருட்கள். அழகு ரசணை உணர்ச்சி போன்ற விடயங்களுல் அடங்கும். அஃதாவது அழகு பார்க்கின்ற பொருளில் உள்ளதா ? அல்லது பார்ப்பவருடைய நோக்கில் உண்டா? அழகு எவ்வாறு மதிப்பி்டப்படுகின்றதென ஆராய்வதே அழகியல் மெய்யியலாகும்.

அழகு பார்ப்பவரின் நோக்கிலில்லை, பார்க்கின்ற பொருளிளே உள்ளதெனக் கூறிக்கொள்ளலாம் காரணம் ச்சா . . அந்தப் பெண் எவ்வளவு அழகு, இந்த ஓவியம் எவ்வளவு அழகு, இந்த காட்சிஅழகே இல்லை, அவளிற்கும் அழகிற்கும் சம்பந்தமேயில்லை என கூறுவதை கேட்டிருக்கின்றோம். இங்கு ஒருபொருள் அழகானது என்பதற்கும், அழகற்றது என்பதற்கும் ஒரே மதிப்பீட்டு கொள்கையினால் தீர்மாணிக்கப்படுகிறது. எனவே அழகின் மதிப்பீட்டு கூற்றுக்கள் புறநிலை தன்மை வாய்ந்தது.


சரி முடிவா என்னத்தான சொல்ல வாறிங்க அப்படித்தானே கேட்குறீங்க ? ? சொல்லுறன் கேளுங்க . . அழகு என்பதற்கு வரைவிலக்கணம் கூறமுடியாது...உங்க மொழில சொன்னால் ..அத விவரிக்க வார்த்தை இல்லீங்க. அப்படி வார்த்தைகளை தேட முடிந்தால் நீங்கள் ஒரு சிந்தனைவாதி அத்தோடு ஒரு மெய்யியல்வாதி என்பதையும் ஏற்றுக்கொள்கின்றேன்....

இப்படிக்கு அழகன்

::ல்மவி::

Sunday, October 25, 2009

நெருப்பு நரி [பயர் பொக்ஸ்]மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் தடயங்களை அழிக்கலாம்

lankasri.com இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்து பல விஷயங்களைப் பெறுகிறோம். வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் தங்கள் வர்த்தக வளர்ச்சிக்காக, பன்னாட்டளவில் தகவல்களைத் தேடுவார்கள். வேலை தேடுபவர்கள், போட்டித் தேர்வு எழுதுபவர்கள், தங்கள் முன்னேற்றத்திற்கென இணையத்தில் தங்கள் தேடலை மேற்கொள்வார்கள். போட்டிகள் நிறைந்த இந்த உலகில் இத்தகைய தேடல்கள் எல்லாம் மற்றவர்களுக்குத் தெரியக்கூடாதே. ஆனால் உங்கள் இன்டர்நெட் பிரவுசிங் செயல்பாடுகள் அனைத்தும் உங்கள் கம்ப்யூட்டரில் இன்டர்நெட் ஹிஸ்டரியாகப் பதியப்படுகிறதே. இதனைப் பயன்படுத்தி யார் வேண்டுமானாலும், நீங்கள் என்ன என்ன தளங்களைப் பார்த்தீர்கள் என்று அறிந்து, அவர்களும் அந்த தளங்களில் இருந்து தகவல்களைப் பெற்று உங்களுக்குப் போட்டியாக செயல்படலாமே. ஆம், இதற்கு என்ன வழி?

இத்தகைய நிலை சில மாதங்களுக்கு முன் இருந்தது. ஆனால் இப்போது வரும் பிரவுசர் பதிப்புகள், உங்களின் இன்டர்நெட் உலா, அடுத்தவர் பார்த்து அறியாத வகையில் இருக்க செட்டிங்ஸ் ஏற்படுத்தும் வசதிகளை அளிக்கின்றன. அவற்றை இங்கு பார்க்கலாம். பிரவுசர்களில் உள்ள இந்த வசதிகளுடன் சில தேர்ட் பார்ட்டி புரோகிராம் எனப்படும் சில புரோகிராம்களும் இந்த வசதியை அளிக்கின்றன. இங்கு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8 மற்றும் பயர்பாக்ஸ் பதிப்பு 3.5 ஆகியவை சார்ந்த பாதுகாப்பு வழிகளைப் பார்க்கலாம்.

1. முதலில் இன்டர்நெட் எக்ஸ்புளோரரைப் பார்ப்போம். டூல்ஸ் மெனு கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், மேலாக உள்ள டெலீட் பிரவுசிங் ஹிஸ்டரி என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் டயலாக் பாக்ஸில் ஐந்து ஆப்ஷன்கள் தரப்படும். இந்த ஆப்ஷன்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், நீங்கள் பார்த்த தளங்களின் பட்டியலை அழிக்கலாம்; குக்கி பைல்களை நீக்கலாம்; இப்படி உங்கள் பிரவுசிங் சம்பந்தமான அனைத்து தடயங்களையும் நீக்கலாம்.


lankasri.com


எவற்றை நீக்க வேண்டும் என முடிவு செய்து, அவற்றைத் தேர்ந்தெடுத்து நீக்கவும். ஆனால் எதனையும் நீக்கும் முன், ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்துச் செயல்படவும். ஏனென்றால் பாஸ்வேர்ட்களை நினைவில் வைத்துப் பயன்படுத்தும் வகையில் நீங்கள் அமைத்திருக்கலாம். அவற்றை நீக்கும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுப்பதில் யோசித்து முடிவெடுக்கவும். அதே போல Form Data, Cookies ஆகியவற்றை நீக்கினால், உங்கள் இன்டர்நெட் பயன்பாடு சற்று தாமதமடையலாம்; அல்லது முழுவதுமாக மாறலாம். எனவே தேவையான ஆப்ஷன்ஸ் தேர்ந்தெடுத்துப் பின் கிளிக் செய்து வெளியேறவும்.

2. இன்னொரு வழியைப் பார்ப்போம். இப்போதும் டூல்ஸ் மெனு கிளிக் செய்து, Internet Options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு கிடைக்கும் பல டேப்கள் அடங்கிய விண்டோவில், Privacy டேப் என்பதில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் பெறும் ஆப்ஷன்கள் மூலமாக, உங்களுடைய கம்ப்யூட்டரில் பதியப்படும் குக்கிகள் எப்படி உங்கள் இன்டர்நெட் பிரவுசிங் செயல்பாட்டில் உதவலாம் என்பதனை நீங்கள் முடிவு செய்திடலாம்.


lankasri.com


பொதுவாக குக்கு பைல்கள் தீங்கு விளைவிக்கும் தன்மை உடையவை என்று நாம் எண்ணி வந்தாலும், பல குக்கிகள் அவை சார்ந்த தளங்களை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைத் தளத்திற்கு உணர்த்தி, அந்த தளத்துடனான நம் அனுபவத்தினைச் சீராக்குகின்றன. எனவே இங்கு தரப்படும் செட்டிங்ஸ் ஸ்கேலில், Medium என்பதைத் தேர்ந்தெடுக்கலாம்.

3. இன்டர்நெட் வெப்சைட்களுக்கு நாம் செல்கையில், அந்த தளங்களில் இருக்கும் இமேஜஸ் மற்றும் பிற தகவல்களை நாம் வைத்திருக்கும் பிரவுசர்கள் காப்பி செய்து வைத்துக் கொள்கின்றன என்று பலருக்குத் தெரியாது. இந்த பைல்களை இன்டர்நெட் ஆப்ஷன்ஸ் விண்டோவில் உள்ள General என்ற டேப்பினைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் பார்க்கலாம். இதன் மூலம் நாம் திரும்ப திரும்ப குறிப்பிட்ட தளங்களுக்குச் செல்கையில், அந்த தளங்கள் விரைவில் நமக்குக் கிடைக்க இந்த பைல்கள் உதவுகின்றன. Browsing History பிரிவில் Settings என்பதில் கிளிக் செய்து பின் View Files என்பதைத் தட்டினால், இந்த பைல்களைக் காணலாம்.

lankasri.com


இவ்வாறு பைல்கள் குவிவதனை நீங்கள் விரும்பவில்லை என்றால், உங்கள் பிரவுசிங் முடிந்து, பிரவுசரை மூடும்போது, அவை அனைத்தையும் போல்டரிலிருந்து நீக்கும் படி நீங்கள் செட் செய்திட முடியும்.

Internet Options விண்டோவில், Advanced என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் நிறைய ஆப்ஷன்ஸ் தரப்பட்டிருக்கும். எனவே கவனமாக இதில் ஸ்குரோல் செய்திட வேண்டும். தவறுதலாக எதனையேனும், நம்மையும் அறியாமல் தேர்ந்தெடுத்து விட்டால், பின் பிரவுசிங் செய்திடுகையில் பிரச்சினை ஏற்படும். ஏற்கனவே பிரவுசர் இன்ஸ்டால் செய்யப்படுகையில் சில ஆப்ஷன்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இருக்கும். இவற்றை நீக்கிவிடாமல் வரிசையாகச் செல்ல வேண்டும். அப்படி எதனையேனும் நீக்கியதாக உணர்ந்தால், உடனே Cancel பட்டன் கிளிக் செய்து மீண்டும் இந்த விண்டோவினைத் திறந்து செலக்ட் செய்திடலாம். இனி இந்த லிஸ்ட்டில் ஸ்குரோல் செய்து அதில் ‘Empty Temporary Internet Files Folder when browser is closed’ என்ற ஆப்ஷன் உள்ள வரியினைத் தேடிக் கண்டுபிடிக்கவும். இதில் ஒரு சிறிய டிக் அடையாளம் ஏற்படுத்தி பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

பயர்பாக்ஸ் 3.5 தொகுப்பு மேலே தரப்பட்டுள்ள பல வசதிகளை மிக எளிமையாக அமைத்துக் கொள்ள வழிகளைத் தருகிறது.Tools மெனுவில் Clear Private Data என்பதைத் தேர்ந்தெடுங்கள். இதில் நீங்கள் எவற்றை எல்லாம் நீக்க வேண்டும் என விரும்புகிறீர்களோ அவற்றை எல்லாம் தேர்ந்தெடுத்து அமைக்கலாம். இதில் டெம்பரரி இன்டர்நெட் பைல்களைக் காலி செய்திட Cache என்பதில் கிளிக் செய்திட வேண்டும்.

இங்கும் பிரவுசர் மூடப்படுகையில் பெர்சனல் தகவல்கள் அனைத்தையும் நீக்குமாறு செட் செய்திடலாம். Tools மெனுவிலிருந்து Options செலக்ட் செய்திடவும். இங்கு Privacy என்ற டேப் அழுத்தினால் கிடைக்கும் பாக்ஸில் Settings அழுத்தவும். பின் Settings for deleting history என்ற விண்டோ கிடைக்கும். இதில் எந்த வகை டேட்டா இருக்கக் கூடாது என்று எண்ணுகிறீர்களோ அவற்றைத் தேர்ந்தெடுத்து, பின் ஓகே கொடுத்து மூடலாம்.

எது எப்படியோ நம்மத்தான் அழித்தல. .. கெட்டீயாச்சே..இது மட்டும் நமக்கு முடியாமலாபோயிரும் என்ன . . . ?

இவன்
::ல்மவி::

Thursday, October 22, 2009

எப்படி இருந்த ஒபாமா இப்படீ ஆயீட்டாரு !


எப்படி இருந்த இவரு இப்படி ஆயீட்டரே அதுக்கு காரணம் என்ன தெரியுமா?
வேற ஒன்றுமில்லை. அன்பழகி தான் இதுக்கு எல்லாம் காரணம்....என்ன அன்பழகியா...அய்யோ....அது யாரப்பா அன்பழகி..என்று யோசிக்கிறிங்களா..இதுக்கு பின்னால ஒரு கதையோ உள்ளதுனா நம்புவீங்களா..? சரி சரி உலட்டாமா..சும்மா பந்தா காட்டாம விஷயத்தை சொல்லுடா அப்படினு புலம்புறது எனக்கு கேட்குது...இது தேவையா விமல் உனக்கு....

ஒரு நாள் காலை அப்படித்தான் என்னோட ப்ரண்ட் ஒருத்தரு ....முகம் கழுவிவிட்டு வந்து மச்சான் அன்பழகிய தாயேன் என்றான் எனக்கும் கூட இருந்த என் கூட்டாளிகளுக்கு என்ன என்றே அறியமுடிய வில்லை ..பிறகு தான் சொன்னா மச்சி பாயர் & லவ்லி யத்தான் அன்பழகி என்றேன் என்றான் ..இப்படியபட்ட அந்த நண்பர் யார் அப்படினு உங்களுக்கு அறிய ஆவலா இருக்குமே...வேற யாரும் இல்ல..மி்ஸ்டர் ஜோர்ஜ் ஸ்டீபன் தான்.{மேல படத்துல பாருங்களே அசலா புஸ்ஸோட தம்பி மாதிரியே இருப்பார் ஆனால் தம்பி இல்லனு சொன்னா கேட்குறானா ? ? } இவரு பத்தி நாம தனி வலைப்பூ ஒன்றே வரையலாம்.. அதவிட விசேசமான ஒரு விடயம் உள்ளது. அது பற்றி நான் சொல்வதை விட ஜோர்ஜ்ஜ கண்டீர்கள் என்றால் சொல்லுவார் இயன்றால் அடுத்த பதிவில் தருகின்றேன்.... அந்த நகைச்சுவைக்கு அவர் என்ன தலைப்பு இட்டு இருக்காரு தெரியுமா... அப்பா செத்த கத....... ஒருக்கா அவர காணுரவங்க அவரிடமே இத கேட்டு சிரிங்களேன்...


அதுவரையிலும்

விடைபெறும் இவன்

::ல்மவி::

Tuesday, October 20, 2009

உங்கள் கணினியை தொலைவில் உள்ள நண்பர்களுடன் பகிர்வது எப்படி?

உங்கள் கணினியை தொலைவில் உள்ள நண்பர்களுடன் பகிர்வது எப்படி?அதுபோல உங்கள் கணினியின் திரையை தொலைவில் உள்ள நண்பர்கள் பார்ப்பதற்கும், அங்கே இருந்தபடி உங்கள் கணினியையே இயக்கவும் உதவும் ஒரு மென்பொருள்தான் டீம்வியூவர்.

உங்கள் கோப்புகளை ஏதேனும் கோப்புப்பகிர்வான் (File sharing) தளங்களில் ஏற்றி அதன் சுட்டியை நண்பர்களுக்குக் கொடுத்து அவர்களை இணையிறக்கம் (Download) செய்யச் சொல்லி கோப்புகளைப் பகிர்ந்து மகிழ்ந்தவர்கள் இணையத்தில் எத்தனையோ பேர்.

இந்த சுட்டியினை அழுத்தி மேலே தோன்றும் வலைப்பகுதிக்கு செல்லவும். அதில் தரவிறக்கம்(Download) என்ற பகுதியை அழுத்தியவுடன்

கீழே உள்ளது போல் ஒரு pop-up window தோன்றியது

அதில் (Save) என்ற பித்தானை அழுத்தி வழக்கமாக சேமிக்கும் பகுதியில் தரவிறக்கம் செய்யவும்
பின்னர் அந்த கோப்பை (TeamViewer_Setup.exe) இரண்டுமுறை கிளிக்கியவுடன்
கீழே உள்ளது போல் ஒரு pop-up window தோன்றும்

மேலே உள்ளதில் (Run) என்ற பித்தானை அழுத்தவும்

மேலே இருக்கும் பகுதியில் (Install - Run) இருந்தது.

அதில் (Run) என்பதை அழுத்தி பிறகு (Next)ஐ கிளிக் செய்யவும்

மேலே உள்ள (Agreement)ஐ டிக்கிவிட்டு (Next)அழுத்தவும்

(விஸ்டாவாக இருந்தால் (Unblock)ஐ அழுத்தவும்)

அவ்வளவு தான் நிறுவியாயிற்று.

(இதுவரை சொல்லியது மாதிரி இரண்டு பக்க கணினியிலும் நிறுவ வேண்டும்.)

இனி எப்படி உபயோகிப்பது என்று பார்ப்போம்.

இரண்டு பக்கங்களிலும் இது போல் ஒரு சாளரம் தோன்றும்.

Wait for Session

Create Session

ID ID ...........................
Password

ID என்ற இடத்தில் உள்ள 9 இலக்க எண்களையும்

password என்ற இடத்தில் உள்ள 4 இலக்க எண்களையும் நீங்கள் - மற்றவரிடம் சொல்ல.

வலப்பக்கம் ID என்ற இடத்தில் தொடர்ச்சியாக 9 இலக்க எண்ணை இட்டு பின் (Remote Support) என்ற தேர்வை தேர்வு செய்து பிறகு (connect to partner) என்ற பித்தானை அழுத்தினார்கள்

பின் தோன்றும் இந்த சாளரத்தில் 4 இலக்க எண்ணை தட்டச்சு செய்து (Log On) என்ற பித்தானை அழுத்தியவுடன் உங் கள் கணினி மற்றவரின் சாளரத்தில் தோன்றியது.

சில வினாடிகளுக்குள்ளாகவே உலகின் ஏதோ ஒரு இடத்தில் உள்ள நண்பரது கணினியையும், உங்களது கம்ப்யூட்டரையும் இணைத்து அவரது கணினியை நீங்களும், உங்கள் கணினியை அவரும் இயக்கலாம்.

கோப்புகளைப் பகிர்வதும், இணைய அரட்டை (chat) அடிப்பதும் இதில் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது.

வணிக ரீதியில்லாத, தனிமனிதப் பயன்பாடுகளுக்கு இந்த அப்ளிகேசன் இலவசமாகவே கிடைக்கிறது.

தொலைதூரத்தில் உள்ள சர்வர்களை (remote server) இங்கிருந்தே இயக்கவோ, மறுபடி துவக்கவோ (Reboot) இயலும்.

நிறைவான பாதுகாப்பையும் (high security), அது உயர் வேகத்தையும் டீம்வியூவரிடம் எதிர்பார்க்கலாம்.

ஃபயர்வால் (firewall) பாதுகாப்புச் சுவர் போன்றவற்றை பல நேரங்களில் ரிமோட் டெஸ்க்டாப் (Remote Desktop) ஊடுருவாது.

ஆனால் ஃபயர்வால் பிரச்சினைகளை டீம்வியூவர் எதிர்கொள்வதில்லை. ஏதேனும் ஒரு மென்பொருள் பயன்பாட்டை கணினியில் install செய்வதற்கு அட்மினிஸ்ட்ரேட்டர் உரிமம் தேவைப்படும். ஆனால் டீம்வியூவரை இன்ஸ்டால் செய்வதற்கு Administrator உரிமம் தேவைப்படாது.


http://www.teamviewer.com/

உரிமையுடன்

இவன்

::ல்மவி::