Thursday, November 5, 2009

''அச்சுவலை சந்திப்பின் அனுபவ அறிக்கை''




பதற்றத்தோடு பதிவுலக சகாக்களை
சந்திக்க பகல் பேருந்தேறி புறப்பட்ட நான்
புலர்ந்தது மறுநாள் காலை கொழும்பில்
சந்திப்பன்று நேரமோ மதியம் இரண்டு
பயணத்தோடு பேருந்தில்
இருக்கிறம் காரியாலயத்ததை நோக்கி
என் இருப்பு நான் அமர்ந்திருந்த பேருந்து இருக்கையில்
இருந்தாலும்- - - மனதோ...
சந்திப்பை பற்றிய எண்ணத்தில்
(சொல்ல மறந்துவிட்டேன் எனது பள்ளி நண்பனின் அண்ணனின் பெயரும் ''சந்திப்'')

இடையில் தரி்த்த பேருந்தில் இரண்டு மூன்று நபர்கள் ஏற கண்டதுமே
சந்தேகம் - - - முகத்தில் தமிழன் மனம் வீச
கையிலிருந்த புத்தகம் காட்டியது நான் ஒரு தமிழன் என்று
(கரங்களில் புத்தகத்தை பற்றியிருந்தது வேறுயாருமல்ல நம்ம மூரனேதான். இப்படி அவருக்கு மட்டும் தானே முடியும் என்று சொல்லுறாங்க உண்மையா?)

ஒருவாறு இருக்கிறம் அலுவலகத்தை அடையாளம் காணமுன்
பேருந்திலிருந்து இறங்கியதும் யோவாய்ஸ், மருதமூரன், சிந்தனை சிறகினிலே பாப்பா போன்றோருடன் இந்த நமக்காக நாயகன் தன்னை அடையாளமிட்டுக்கொண்டேன். மெல்ல மெல்ல. .....
தன்அடிகளை எதிர்பார்ப்போடு
அச்சுவலை சந்திப்பை நோக்கி நகர்த்தினேன் அந்த அறிமுக பதிவர்களோடு..

பெரியோர்களின் ஏற்பாடு என்பதால்
நேர முகாமையை கருத்தில் கொண்டே
சந்திப்பு தொடங்க பத்து நிமிடங்கள் முன்பே
அவ்விடத்தை அடைந்தேன். இருப்பினும் நேரத்திற்கான வேலை நடந்ததா
என்பது வந்த உங்களுக்கு தெரியும் ...ம் ம் ம் ?

வெளியிலிருந்து எட்டி பார்க்கும் போது
ஆங்காங்கே இருக்கிறம் சஞ்சிகையின் விளம்பரங்கள்
சூழலை அலங்கரிக்க அதோடு இணைந்து இனிமையான இசை
செவிகளை வருட எனது எதிர்பார்ப்பு பல மடங்காகியது..


அதனிடையே வருணபகவான் தன் கைவரிசையை காட்ட எத்தணித்துவிட்டான்
மழைத்துளிகளின் தூரலே எங்களை உள் அழைத்தது வாசலில் இருந்த எங்களை
திருவடிகளை எடுத்து வைத்ததுமே என்னுள் சந்தேகம் அச்சுவலை சந்திப்பு இங்குதானா என்று, காரணம் ஏற்பாடுகளை பெரிதளவாக யோசித்துவிட்டேன்.
(நாங்கள் சென்றபோது தான் தங்களது ஆயத்தங்களை செய்து கொண்டிருந்தார்கள். என்னென்றால் நேரத்திற்கு நாம் வேலை செய்து பழக வேண்டுமல்லாவா )

ஏதோ அதுவம் அனுபவமே, பின் அது படிப்பினையாகலாம் .
புது புது முகங்கள் இச்சந்திப்பில்
அதிலும் அனுபவம் வாய்ந்த முக்கியமான முக்கியஸ்த்தர்கள்
அனைவரோடும் சந்திக்க இந்த சந்திப்பு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது
அதற்கு நான் நன்றிகளை மீ்ண்டும் மீண்டும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

(குறிப்பாக ஒலிபரப்பாளனாக வேண்டும என்ற இலட்சியம் கொண்ட எனக்கு அதிகளவான மூத்த, முதன்மையான ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாட கிடைத்தது இரட்டிப்பான மகிழ்ச்சியே.)

சந்திப்பின் சடுதியில் எமக்கு
தாக சாந்தி பின்னால் ஒழுங்கு செய்ய
தாகமாய் இருந்த என்னை ஒரு சாந்தி (பெண்)
அழைக்க நானும் சென்றேன் (யோவ் என்ன டீப்பா யோசிக்கிறங்க ஜஸ்ட் தாகசாந்திக்கு சென்றென் அவ்வளவுதான்.)
பின்புறம் சென்றதுமே.. அதிர்ச்சியாகிவிட்டேன் (காரணம் தெரியும் என்று நினைக்கின்றேன்)
அதிர்ச்சியை காட்டிக்கொள்ளாமல் இருந்த ஆகாரத்தை உண்டு தண்ணீர் பருக பக்கத்தில் இருந்த
மதிப்புமிக்க ஆசான் திரு. வித்தியாதரன் என் அருகில் நிற்க மெதுவாக என்னை அறிமுகம் செய்து கொண்டேன் சிரித்த முகத்தோடு அன்போடு பழகிய அந்த வரலாற்று மனிதரோடு நின்று
புகைப்படம் எடுத்தபோது
சிரித்துக்கொண்டே சொன்னார் ''தம்பி என்னோடாயா படம் எடுக்குறீங்க என்று"
அதன் பின்புலம் தெரியும் தானே....
(எந்தளவுக்கு எங்ளது இருப்பு இருக்கின்தறது என்றது நினைக்க கவலையே )

இணையத்தொடர்பில் எதிர்பார்க்காத
சிலரின் உரையை கேட்க
பூரித்துப்போனேன்.....
அவ்வாறே நேரம் நகர நகர சூரியன் தன் அன்றைய நாளின் இருப்பை
மறுப்பக்கம் நகர்த்த இருள் சூழ்ந்தது...
இடைநடுவே சிலர் விடைபெற
நானும் ஒரு கனம் யோசித்தேன்
செல்லமுடியாமல் சிலரின் உரைகளும்
பதிவர்களின் நட்பும் தடுத்தன.

அன்றைய தினத்தை நான்
பயனாக்கிக் கொண்டேன்
மற்றவர்கள் எப்படியோ......
ஒருவாறு சந்திப்பு இனிதே முடிய
நண்பர்களான புதிய மலையக பதிவின் சொந்தகாரர்
இரக்குவானை நிர்ஷனும், அருண் பிரசாத்தும் (வெற்றி எபெம்) வழியனுப்ப
மீண்டும் சந்திப்போம் என்று விடைபெற்றோம்.
இரவோடு இரவாக வந்தேன்பண்டாரவளை பூனாகலைக்கு

(என்ன ஒரு ஏக்கம் யோவொய்ஸ் அண்ணாவுக்கு பேருந்தில் ஏற்பட்ட அந்த அனுபவம் எனக்கு ஏற்படவில்லையே - இது தான் சொன்னாங்களோ எட்டாத பழத்திற்கு கொட்டாவி விடாகூடாது என்று)