Tuesday, October 27, 2009

அழகியல் பற்றி மெய்யியல் பார்வை



எல்லாரையும் கும்பிறனுங்க . . என்னங்க ரொம்ப யோசனையா இருக்கிங்க..... யாராவது உங்களபார்த்து அழகுகும் உங்களுக்கும் சம்பந்தமே இல்லனு சொல்லிட்டாங்களா? கவலை உதரி தள்ளிட்டு இதை வாசித்து பாருங்களேன்.... உண்மை புரியும். சரி சரி யோசிங்க ஆனால்...இவன் இயம்புவதையும் கொஞ்சம் கேட்டால் என்னவாம்... இன்று அழகு பற்றி பார்ப்போமா? ? நாம எல்லாரும் சில விடயங்களை தெரியாமலே பண்ணிக்கொண்டு இருக்கின்றோம் . அது தெரியுமா உங்களுக்கு? அது தெரிஞ்சா ஏன் இங்கு இருக்கிறம் அப்படினு சொல்லுறது எனக்கு விளங்குது.. பார்கிற எல்லாவற்றையும் சிலர் வாவ் !எவ்வளவு அழகு ! என்று வியப்பார்கள்...நான் கேட்கிறன் அழகு என்றால்.. என்ன.. அவலட்சணம் என்றால் என்ன? எப்படி ஒன்றை பார்த்து அழகு என்று கணிப்பிடுவது...இப்படி எப்போதாவது யோசித்துள்ளீர்களா...... இந்த அழகு என்ற பதத்திற்கு நமது மெய்யியல் வாதிகள் என்ன சொல்லிறுக்காங்க என்று பார்ப்போமே . . .

அழகிற்கு அங்கிகரிக்கப்பட்ட ஒரு தனிப்பட்ட ஒரு தனிக் கொள்கை கிடையாது. அழகு எனும் பதம் மயக்கம் தருவதாகும். ஒழுக்கவியல், அளவையியல் பெளதீக அதீதம், அறிவாராட்சி போன்ற துறைகளை போலவே அழகியல் பிரச்சனைகளும் காலம் காலமாக ஆராயப்பட்டு வருகிறது 18ம் நூற்றாண்டுவரை அழகியல் என்ற பதம் கலைப்பற்றிய மெய்யியலாளர்களின் கட்டுரைகளில் இடம்பிடிக்கவில்லை. 1970ல் பவுன் கார்த்தே என்பவரை முதன் முதலில் கலை என்ற சொல்லுக்கு அழகு எனும் பதத்தை பயன்படுத்தினார். இங்கு அழகியலை மெய்யியல் ரீதியா ஆராயவுள்ளது எனவேதான் அழகியல் மெய்யியல் எனப்படுகிறது. இதனை கலைழகு பற்றிய தேடல் என்பர். காட்சிகளாலும் கற்பனைகளாலும் பெறக்கூடிய அநுபவமே அழகு. அழகை வெளிப்படுத்துவன கலைப்பொருட்கள். அழகு ரசணை உணர்ச்சி போன்ற விடயங்களுல் அடங்கும். அஃதாவது அழகு பார்க்கின்ற பொருளில் உள்ளதா ? அல்லது பார்ப்பவருடைய நோக்கில் உண்டா? அழகு எவ்வாறு மதிப்பி்டப்படுகின்றதென ஆராய்வதே அழகியல் மெய்யியலாகும்.

அழகு பார்ப்பவரின் நோக்கிலில்லை, பார்க்கின்ற பொருளிளே உள்ளதெனக் கூறிக்கொள்ளலாம் காரணம் ச்சா . . அந்தப் பெண் எவ்வளவு அழகு, இந்த ஓவியம் எவ்வளவு அழகு, இந்த காட்சிஅழகே இல்லை, அவளிற்கும் அழகிற்கும் சம்பந்தமேயில்லை என கூறுவதை கேட்டிருக்கின்றோம். இங்கு ஒருபொருள் அழகானது என்பதற்கும், அழகற்றது என்பதற்கும் ஒரே மதிப்பீட்டு கொள்கையினால் தீர்மாணிக்கப்படுகிறது. எனவே அழகின் மதிப்பீட்டு கூற்றுக்கள் புறநிலை தன்மை வாய்ந்தது.


சரி முடிவா என்னத்தான சொல்ல வாறிங்க அப்படித்தானே கேட்குறீங்க ? ? சொல்லுறன் கேளுங்க . . அழகு என்பதற்கு வரைவிலக்கணம் கூறமுடியாது...உங்க மொழில சொன்னால் ..அத விவரிக்க வார்த்தை இல்லீங்க. அப்படி வார்த்தைகளை தேட முடிந்தால் நீங்கள் ஒரு சிந்தனைவாதி அத்தோடு ஒரு மெய்யியல்வாதி என்பதையும் ஏற்றுக்கொள்கின்றேன்....

இப்படிக்கு அழகன்

::ல்மவி::









No comments:

Post a Comment