Sunday, October 25, 2009

நெருப்பு நரி [பயர் பொக்ஸ்]மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் தடயங்களை அழிக்கலாம்

lankasri.com இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்து பல விஷயங்களைப் பெறுகிறோம். வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் தங்கள் வர்த்தக வளர்ச்சிக்காக, பன்னாட்டளவில் தகவல்களைத் தேடுவார்கள். வேலை தேடுபவர்கள், போட்டித் தேர்வு எழுதுபவர்கள், தங்கள் முன்னேற்றத்திற்கென இணையத்தில் தங்கள் தேடலை மேற்கொள்வார்கள். போட்டிகள் நிறைந்த இந்த உலகில் இத்தகைய தேடல்கள் எல்லாம் மற்றவர்களுக்குத் தெரியக்கூடாதே. ஆனால் உங்கள் இன்டர்நெட் பிரவுசிங் செயல்பாடுகள் அனைத்தும் உங்கள் கம்ப்யூட்டரில் இன்டர்நெட் ஹிஸ்டரியாகப் பதியப்படுகிறதே. இதனைப் பயன்படுத்தி யார் வேண்டுமானாலும், நீங்கள் என்ன என்ன தளங்களைப் பார்த்தீர்கள் என்று அறிந்து, அவர்களும் அந்த தளங்களில் இருந்து தகவல்களைப் பெற்று உங்களுக்குப் போட்டியாக செயல்படலாமே. ஆம், இதற்கு என்ன வழி?

இத்தகைய நிலை சில மாதங்களுக்கு முன் இருந்தது. ஆனால் இப்போது வரும் பிரவுசர் பதிப்புகள், உங்களின் இன்டர்நெட் உலா, அடுத்தவர் பார்த்து அறியாத வகையில் இருக்க செட்டிங்ஸ் ஏற்படுத்தும் வசதிகளை அளிக்கின்றன. அவற்றை இங்கு பார்க்கலாம். பிரவுசர்களில் உள்ள இந்த வசதிகளுடன் சில தேர்ட் பார்ட்டி புரோகிராம் எனப்படும் சில புரோகிராம்களும் இந்த வசதியை அளிக்கின்றன. இங்கு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8 மற்றும் பயர்பாக்ஸ் பதிப்பு 3.5 ஆகியவை சார்ந்த பாதுகாப்பு வழிகளைப் பார்க்கலாம்.

1. முதலில் இன்டர்நெட் எக்ஸ்புளோரரைப் பார்ப்போம். டூல்ஸ் மெனு கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், மேலாக உள்ள டெலீட் பிரவுசிங் ஹிஸ்டரி என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் டயலாக் பாக்ஸில் ஐந்து ஆப்ஷன்கள் தரப்படும். இந்த ஆப்ஷன்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், நீங்கள் பார்த்த தளங்களின் பட்டியலை அழிக்கலாம்; குக்கி பைல்களை நீக்கலாம்; இப்படி உங்கள் பிரவுசிங் சம்பந்தமான அனைத்து தடயங்களையும் நீக்கலாம்.


lankasri.com


எவற்றை நீக்க வேண்டும் என முடிவு செய்து, அவற்றைத் தேர்ந்தெடுத்து நீக்கவும். ஆனால் எதனையும் நீக்கும் முன், ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்துச் செயல்படவும். ஏனென்றால் பாஸ்வேர்ட்களை நினைவில் வைத்துப் பயன்படுத்தும் வகையில் நீங்கள் அமைத்திருக்கலாம். அவற்றை நீக்கும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுப்பதில் யோசித்து முடிவெடுக்கவும். அதே போல Form Data, Cookies ஆகியவற்றை நீக்கினால், உங்கள் இன்டர்நெட் பயன்பாடு சற்று தாமதமடையலாம்; அல்லது முழுவதுமாக மாறலாம். எனவே தேவையான ஆப்ஷன்ஸ் தேர்ந்தெடுத்துப் பின் கிளிக் செய்து வெளியேறவும்.

2. இன்னொரு வழியைப் பார்ப்போம். இப்போதும் டூல்ஸ் மெனு கிளிக் செய்து, Internet Options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு கிடைக்கும் பல டேப்கள் அடங்கிய விண்டோவில், Privacy டேப் என்பதில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் பெறும் ஆப்ஷன்கள் மூலமாக, உங்களுடைய கம்ப்யூட்டரில் பதியப்படும் குக்கிகள் எப்படி உங்கள் இன்டர்நெட் பிரவுசிங் செயல்பாட்டில் உதவலாம் என்பதனை நீங்கள் முடிவு செய்திடலாம்.


lankasri.com


பொதுவாக குக்கு பைல்கள் தீங்கு விளைவிக்கும் தன்மை உடையவை என்று நாம் எண்ணி வந்தாலும், பல குக்கிகள் அவை சார்ந்த தளங்களை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைத் தளத்திற்கு உணர்த்தி, அந்த தளத்துடனான நம் அனுபவத்தினைச் சீராக்குகின்றன. எனவே இங்கு தரப்படும் செட்டிங்ஸ் ஸ்கேலில், Medium என்பதைத் தேர்ந்தெடுக்கலாம்.

3. இன்டர்நெட் வெப்சைட்களுக்கு நாம் செல்கையில், அந்த தளங்களில் இருக்கும் இமேஜஸ் மற்றும் பிற தகவல்களை நாம் வைத்திருக்கும் பிரவுசர்கள் காப்பி செய்து வைத்துக் கொள்கின்றன என்று பலருக்குத் தெரியாது. இந்த பைல்களை இன்டர்நெட் ஆப்ஷன்ஸ் விண்டோவில் உள்ள General என்ற டேப்பினைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் பார்க்கலாம். இதன் மூலம் நாம் திரும்ப திரும்ப குறிப்பிட்ட தளங்களுக்குச் செல்கையில், அந்த தளங்கள் விரைவில் நமக்குக் கிடைக்க இந்த பைல்கள் உதவுகின்றன. Browsing History பிரிவில் Settings என்பதில் கிளிக் செய்து பின் View Files என்பதைத் தட்டினால், இந்த பைல்களைக் காணலாம்.

lankasri.com


இவ்வாறு பைல்கள் குவிவதனை நீங்கள் விரும்பவில்லை என்றால், உங்கள் பிரவுசிங் முடிந்து, பிரவுசரை மூடும்போது, அவை அனைத்தையும் போல்டரிலிருந்து நீக்கும் படி நீங்கள் செட் செய்திட முடியும்.

Internet Options விண்டோவில், Advanced என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் நிறைய ஆப்ஷன்ஸ் தரப்பட்டிருக்கும். எனவே கவனமாக இதில் ஸ்குரோல் செய்திட வேண்டும். தவறுதலாக எதனையேனும், நம்மையும் அறியாமல் தேர்ந்தெடுத்து விட்டால், பின் பிரவுசிங் செய்திடுகையில் பிரச்சினை ஏற்படும். ஏற்கனவே பிரவுசர் இன்ஸ்டால் செய்யப்படுகையில் சில ஆப்ஷன்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இருக்கும். இவற்றை நீக்கிவிடாமல் வரிசையாகச் செல்ல வேண்டும். அப்படி எதனையேனும் நீக்கியதாக உணர்ந்தால், உடனே Cancel பட்டன் கிளிக் செய்து மீண்டும் இந்த விண்டோவினைத் திறந்து செலக்ட் செய்திடலாம். இனி இந்த லிஸ்ட்டில் ஸ்குரோல் செய்து அதில் ‘Empty Temporary Internet Files Folder when browser is closed’ என்ற ஆப்ஷன் உள்ள வரியினைத் தேடிக் கண்டுபிடிக்கவும். இதில் ஒரு சிறிய டிக் அடையாளம் ஏற்படுத்தி பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

பயர்பாக்ஸ் 3.5 தொகுப்பு மேலே தரப்பட்டுள்ள பல வசதிகளை மிக எளிமையாக அமைத்துக் கொள்ள வழிகளைத் தருகிறது.Tools மெனுவில் Clear Private Data என்பதைத் தேர்ந்தெடுங்கள். இதில் நீங்கள் எவற்றை எல்லாம் நீக்க வேண்டும் என விரும்புகிறீர்களோ அவற்றை எல்லாம் தேர்ந்தெடுத்து அமைக்கலாம். இதில் டெம்பரரி இன்டர்நெட் பைல்களைக் காலி செய்திட Cache என்பதில் கிளிக் செய்திட வேண்டும்.

இங்கும் பிரவுசர் மூடப்படுகையில் பெர்சனல் தகவல்கள் அனைத்தையும் நீக்குமாறு செட் செய்திடலாம். Tools மெனுவிலிருந்து Options செலக்ட் செய்திடவும். இங்கு Privacy என்ற டேப் அழுத்தினால் கிடைக்கும் பாக்ஸில் Settings அழுத்தவும். பின் Settings for deleting history என்ற விண்டோ கிடைக்கும். இதில் எந்த வகை டேட்டா இருக்கக் கூடாது என்று எண்ணுகிறீர்களோ அவற்றைத் தேர்ந்தெடுத்து, பின் ஓகே கொடுத்து மூடலாம்.

எது எப்படியோ நம்மத்தான் அழித்தல. .. கெட்டீயாச்சே..இது மட்டும் நமக்கு முடியாமலாபோயிரும் என்ன . . . ?

இவன்
::ல்மவி::

Thursday, October 22, 2009

எப்படி இருந்த ஒபாமா இப்படீ ஆயீட்டாரு !


எப்படி இருந்த இவரு இப்படி ஆயீட்டரே அதுக்கு காரணம் என்ன தெரியுமா?
வேற ஒன்றுமில்லை. அன்பழகி தான் இதுக்கு எல்லாம் காரணம்....என்ன அன்பழகியா...அய்யோ....அது யாரப்பா அன்பழகி..என்று யோசிக்கிறிங்களா..இதுக்கு பின்னால ஒரு கதையோ உள்ளதுனா நம்புவீங்களா..? சரி சரி உலட்டாமா..சும்மா பந்தா காட்டாம விஷயத்தை சொல்லுடா அப்படினு புலம்புறது எனக்கு கேட்குது...இது தேவையா விமல் உனக்கு....

ஒரு நாள் காலை அப்படித்தான் என்னோட ப்ரண்ட் ஒருத்தரு ....முகம் கழுவிவிட்டு வந்து மச்சான் அன்பழகிய தாயேன் என்றான் எனக்கும் கூட இருந்த என் கூட்டாளிகளுக்கு என்ன என்றே அறியமுடிய வில்லை ..பிறகு தான் சொன்னா மச்சி பாயர் & லவ்லி யத்தான் அன்பழகி என்றேன் என்றான் ..இப்படியபட்ட அந்த நண்பர் யார் அப்படினு உங்களுக்கு அறிய ஆவலா இருக்குமே...வேற யாரும் இல்ல..மி்ஸ்டர் ஜோர்ஜ் ஸ்டீபன் தான்.{மேல படத்துல பாருங்களே அசலா புஸ்ஸோட தம்பி மாதிரியே இருப்பார் ஆனால் தம்பி இல்லனு சொன்னா கேட்குறானா ? ? } இவரு பத்தி நாம தனி வலைப்பூ ஒன்றே வரையலாம்.. அதவிட விசேசமான ஒரு விடயம் உள்ளது. அது பற்றி நான் சொல்வதை விட ஜோர்ஜ்ஜ கண்டீர்கள் என்றால் சொல்லுவார் இயன்றால் அடுத்த பதிவில் தருகின்றேன்.... அந்த நகைச்சுவைக்கு அவர் என்ன தலைப்பு இட்டு இருக்காரு தெரியுமா... அப்பா செத்த கத....... ஒருக்கா அவர காணுரவங்க அவரிடமே இத கேட்டு சிரிங்களேன்...


அதுவரையிலும்

விடைபெறும் இவன்

::ல்மவி::

Tuesday, October 20, 2009

உங்கள் கணினியை தொலைவில் உள்ள நண்பர்களுடன் பகிர்வது எப்படி?

உங்கள் கணினியை தொலைவில் உள்ள நண்பர்களுடன் பகிர்வது எப்படி?அதுபோல உங்கள் கணினியின் திரையை தொலைவில் உள்ள நண்பர்கள் பார்ப்பதற்கும், அங்கே இருந்தபடி உங்கள் கணினியையே இயக்கவும் உதவும் ஒரு மென்பொருள்தான் டீம்வியூவர்.

உங்கள் கோப்புகளை ஏதேனும் கோப்புப்பகிர்வான் (File sharing) தளங்களில் ஏற்றி அதன் சுட்டியை நண்பர்களுக்குக் கொடுத்து அவர்களை இணையிறக்கம் (Download) செய்யச் சொல்லி கோப்புகளைப் பகிர்ந்து மகிழ்ந்தவர்கள் இணையத்தில் எத்தனையோ பேர்.

இந்த சுட்டியினை அழுத்தி மேலே தோன்றும் வலைப்பகுதிக்கு செல்லவும். அதில் தரவிறக்கம்(Download) என்ற பகுதியை அழுத்தியவுடன்

கீழே உள்ளது போல் ஒரு pop-up window தோன்றியது

அதில் (Save) என்ற பித்தானை அழுத்தி வழக்கமாக சேமிக்கும் பகுதியில் தரவிறக்கம் செய்யவும்
பின்னர் அந்த கோப்பை (TeamViewer_Setup.exe) இரண்டுமுறை கிளிக்கியவுடன்
கீழே உள்ளது போல் ஒரு pop-up window தோன்றும்

மேலே உள்ளதில் (Run) என்ற பித்தானை அழுத்தவும்

மேலே இருக்கும் பகுதியில் (Install - Run) இருந்தது.

அதில் (Run) என்பதை அழுத்தி பிறகு (Next)ஐ கிளிக் செய்யவும்

மேலே உள்ள (Agreement)ஐ டிக்கிவிட்டு (Next)அழுத்தவும்

(விஸ்டாவாக இருந்தால் (Unblock)ஐ அழுத்தவும்)

அவ்வளவு தான் நிறுவியாயிற்று.

(இதுவரை சொல்லியது மாதிரி இரண்டு பக்க கணினியிலும் நிறுவ வேண்டும்.)

இனி எப்படி உபயோகிப்பது என்று பார்ப்போம்.

இரண்டு பக்கங்களிலும் இது போல் ஒரு சாளரம் தோன்றும்.

Wait for Session

Create Session

ID ID ...........................
Password

ID என்ற இடத்தில் உள்ள 9 இலக்க எண்களையும்

password என்ற இடத்தில் உள்ள 4 இலக்க எண்களையும் நீங்கள் - மற்றவரிடம் சொல்ல.

வலப்பக்கம் ID என்ற இடத்தில் தொடர்ச்சியாக 9 இலக்க எண்ணை இட்டு பின் (Remote Support) என்ற தேர்வை தேர்வு செய்து பிறகு (connect to partner) என்ற பித்தானை அழுத்தினார்கள்

பின் தோன்றும் இந்த சாளரத்தில் 4 இலக்க எண்ணை தட்டச்சு செய்து (Log On) என்ற பித்தானை அழுத்தியவுடன் உங் கள் கணினி மற்றவரின் சாளரத்தில் தோன்றியது.

சில வினாடிகளுக்குள்ளாகவே உலகின் ஏதோ ஒரு இடத்தில் உள்ள நண்பரது கணினியையும், உங்களது கம்ப்யூட்டரையும் இணைத்து அவரது கணினியை நீங்களும், உங்கள் கணினியை அவரும் இயக்கலாம்.

கோப்புகளைப் பகிர்வதும், இணைய அரட்டை (chat) அடிப்பதும் இதில் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது.

வணிக ரீதியில்லாத, தனிமனிதப் பயன்பாடுகளுக்கு இந்த அப்ளிகேசன் இலவசமாகவே கிடைக்கிறது.

தொலைதூரத்தில் உள்ள சர்வர்களை (remote server) இங்கிருந்தே இயக்கவோ, மறுபடி துவக்கவோ (Reboot) இயலும்.

நிறைவான பாதுகாப்பையும் (high security), அது உயர் வேகத்தையும் டீம்வியூவரிடம் எதிர்பார்க்கலாம்.

ஃபயர்வால் (firewall) பாதுகாப்புச் சுவர் போன்றவற்றை பல நேரங்களில் ரிமோட் டெஸ்க்டாப் (Remote Desktop) ஊடுருவாது.

ஆனால் ஃபயர்வால் பிரச்சினைகளை டீம்வியூவர் எதிர்கொள்வதில்லை. ஏதேனும் ஒரு மென்பொருள் பயன்பாட்டை கணினியில் install செய்வதற்கு அட்மினிஸ்ட்ரேட்டர் உரிமம் தேவைப்படும். ஆனால் டீம்வியூவரை இன்ஸ்டால் செய்வதற்கு Administrator உரிமம் தேவைப்படாது.


http://www.teamviewer.com/

உரிமையுடன்

இவன்

::ல்மவி::


உங்கள் குழந்தைகள் எந்தெந்த தளங்களில் அதிக நேரம் செலவிடுகிறார்கள் தெரிந்து கொள்ள எளிய வழி

""என்ட பிள்ள அப்படி இல்லடி"" இப்படி எத்தன பேர் சொன்னாலும் நம்பமாட்டிங்க தானே இப்ப வாசித்து பாருங்களேன் உங்களுக்கே புரியும்....

நண்பர்களே எப்படி இருக்கிங்க? இன்று உங்களுக்கு உங்கள் குழந்தைகள் எந்தெந்த தளங்களில் அதிக நேரம் செலவிடுகிறார்கள் தெரிந்து கொள்ள எளிய வழி எது என்பது தான் . இணையத்தில் எவ்வளவோ மின் புத்தகங்கள் உள்ளன. அவை அனைத்தையும் இதனுள்ளே தான் வைத்துள்ளது போல் உள்ளது. நீங்கள் எந்த ஒரு புத்தகங்களையும் தேடி பெறலாம். இங்கு உள்ள அனைத்தும் கணிணி கல்வி சம்பந்தப்பட்ட புத்தகங்கள் மொத்தம் 38,000,000 புத்தகங்கள் உள்ளனவாம். இது மட்டுமல்லாமல் இன்னும் சேர்க்கப்படும். உங்களுக்கு வேண்டிய புத்தகங்களை நேரடியாக தரவிறக்கிக் கொள்ளலாம் பிடிஎப் கோப்பாக இன்னும் ஏன் காத்திருக்கிறீர்கள் செல்லுங்கள் தளத்திற்கு தரவிறக்கச் சுட்டி

உங்கள் குழந்தைகள் இணையத்தில் மிக அதிக நேரம் செலவிடுகிறார்களா கொஞ்சம் உஷாராக இருக்கவும். கணிணி வழியாக உங்கள் குழந்தைகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முகம் தெரியாத இணையத் தீவிரவாதிகள் உள்ளனர். அதற்கு என்ன செய்வது அவர்கள் பாடத்திற்கு ரெபரன்ஸ் (Reference) தேடுகின்றனர் என்று கூறி விட்டு ஆபாச பாடம் படிக்க சென்றால் அவர்களை கண்காணிப்பது என்று உங்களுக்கு கவலையா உங்கள் கவலையை விடுங்கள் உங்களுக்கு என்று ஒரு தளம் உள்ளது. இந்த தளத்தில் சென்று முதலில் பதிவு கொள்ளுங்கள். உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு ஆக்டிவேசன் மெயில் அனுப்புவார்கள். அதை ஆக்டிவேட் செய்யவும். பிறகு ஒரு மென்பொருள் தரவிறக்க கூறுவார்கள். இந்த மென்பொருளை தரவிறக்கி உங்கள் குழந்தை உபயோகிக்கும் கணிணியில் நிறுவி விடுங்கள். உங்கள் குழந்தைக்கென்று தனி யூசர் உருவாக்கியிருந்தால் உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் கண்காணிக்க வேண்டிய யூசர்களை கொடுக்கவும் முடிந்தது. இனி வாரம் ஒரு முறை உங்கள் குழந்தைகள் எந்தெந்த தளங்களுக்கு அதிகசென்றுள்ளனர். எந்தெந்த மென்பொருட்களை அதிகம் உபயோகப்படுத்தியுள்ளனர் என்று உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிடுவார்கள். சுட்டி

யூட்யுப் தளத்தில் இருந்து உயர்தர ஒளி படங்களை தரவிறக்க இந்த ஆடு ஆன் உபயோகப்படும் உங்களுக்காக சுட்டி


இந்த ஆடு - ஆன் குறித்து மேலும் தெரிந்து கொள்ள ஆங்கிலப் பதிவு சுட்டி

நீங்கள் சில மென்பொருட்கள் உபயோகிக்கும் போது மூட ஆல்ட் + எப் 4 (Alt + F4) உபயோகித்திருப்பீர்கள். இதற்கு பதில் இந்த சூப்பர் எப் 4 உபயோகித்து பாருங்கள். மிக வேகமாக மூட இந்த மென் பொருள் உபயோகிக்கலாம். மென்பொருள் தரவிறக்க சுட்டி

எந்தவொரு வீடியோவாக இருந்தாலும் அதில் இருந்து ஆடியோவை எம்பி3 ஆக மட்டும் தனியாக பிரித்து கொடுக்க இந்த மென்பொருள் மிகவும் உபயோகமாக இருக்கும். சுட்டி

மைக்ரோசாப்டின் லைவ் ஹாட்மெயிலில் 500ஜிபி வரை இடம் அளித்திருக்கிறார்கள் எனக்கு இன்னமும் 5ஜிபி தான் தருகிறார்கள் யாருக்காவது உண்மை என்னவென்று தெரிந்தவர்கள் யாராவது கூறவும்.




கூறும் வரை எதிர்பாத்தவனாய்

இவன்
""ல்மவி""

Virus இருக்கா? இல்லையா?

கொஞ்சம் பொருங்க வாசிக்க முதல்ல.. Chairஅ அ நல்லா வசதியா போட்டு வாசிங்க இல்லாவிடில் வைரஸ் எதும் வந்துறும் அப்படினு நான் பயமுறுத்தல ஆனால் ..சரியா போட்டு வாசித்தீர்கள் என்றால் உங்களுக்கு .........வலிக்காதில்ல...அதுத்தான் .......

உங்களிடம் சந்தேகப்படும் வகையில் ஏதேனும் கோப்புகள் இருந்தால் (அதாவது வைரசு தொற்றி இருக்குமோ என்ற வகையில்) அவற்றை வைரசுடோட்டல் என்னும் இந்த தளத்தில் ஏற்றிச் சோதித்துப் பாருங்கள்.

இந்தத் தளத்தில் இலவசமாகவே மொத்தம் 32 வைரசு எதிர்ப்பான்களைக் கொண்டு இந்த ஏற்றப்பட்ட கோப்புகளை சோதித்து உடனே முடிவுகளை அறிவித்துவிடுகிறார்கள். உங்கள் சந்தேகமும் தெளிவாகிவிடும்.

இலவசச் சேவை இணையத்தில் இங்கே கிடைக்கும்.

http://www.virustotal.com/


கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்

இவன்

::ல்மவி::

Sunday, October 18, 2009

இரண்டு கணினிகளை இணைப்பது எப்படி?

ஆமாம் நண்பர்களே தீபாவளி முடிஞ்ச கையோட இந்த முயற்சி்த்து பாருங்களேன்.

தற்போது நாம் முன்னொருபோதும் இல்லாதவாறு ஒன்றோடொன்று பிண்ணிப் பிணைந்த ஓர் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எமது அன்றாட வாழ்வில் ஓர் அங்கமாக கணினிகள் மாறி விட்டதைத் தொடந்து மக்களுக்கியேயான தொடர்பாடல் முறைகளும் மாறியிருப்பதைக் காண் கிறோம்..

இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட கணினிகளை ஒன்றோடொன்று இணைக்கப் பட்டிருப்பின் அதனை ஒரு கணினி வலையமைப்பு (Computer Network) எனப்படும். கணினிகளை ஒன்றோடொன்று இணைப்பதிலும் பல்வேறு முறைகள் பயன் பாட்டிலுள்ளன. வலையமைப்பின் அளவைப் பொருத்து இந்த ஒவ்வொரு முறையும் அதற்கேயுரிய சாதக பாதகங்களையும் கொண்டுள்ளன.

எந்த வகையிலான கணினி வலையமைப்பை உருவாக்கும் போதும் சில அடிப்படை விடயங்களைக் கருத்தில் கொள்ள் வேண்டியுள்ளது, உதாரணமாக் வலையமைப்பு உருவாக்கப் போவது கம்பியூடா (wired) அல்லது கம்பியில்லாமலா (wireless) என்பது. அதேபோன்று ஒரு வலையமைப்பில் முகிய பங்காற்றுவது ப்ரொட்டகோல் (Protocol) எனப்படும் தொடர்பாடல் விதி முறைகளாகும். இரு வேறு பட்ட கணினிகள் தொடர்பாடும் போது இணைப்பு மொழியாக் இந்த ப்ரொட்ட்கோல் தொழிற்படுகிறது. தற்போது கணினி வலையமைப்பில் TCP/IP எனும் தொடர்பாடல் விதிமுறையே பயன் பாட்டிலுள்ள்து.. இந்த விதி முறையே உலகலாவிய கணினி வலையமைப்பான இணையத்திலும் பயன் படுத்தப்படுகிறது.


பைல் மற்றும் வளங்களைப் பாரிமாறிக் கொள்ளும் வசதி, மின்னஞ்சல், கணினி வழி உரையாடல், பேஸ் புக் போன்ற சோஷியல் நெட் வொர்க் (Social Networking) சேவைகள் போன்றன் இன்றைய கணினிகளால் இணைந்து விட்ட உலகின் வியக்கத் தக்க பயன்பாடுகளாக்ப் பரபரப்பாகப் பேச்ப்படுகிறது. உலகம் முழுதுமுள்ள கணினிகளின் வலையமைப்பே இதனைச் சாத்தியமாக்கியது.
இனி விடயத்திற்கு வருவோம். வீட்டிலோ அலுவலகத்திலோ கணினிகளை ஓர் அறையின் மூலையில் வெளியுலக் தொடர்பேதுமில்லால் (Stand alone) தனியாக வைத்துப் பாவிக்கும் காலம் எப்போதோ மலையேறி விட்டது இருப்பது இரண்டே இரண்டு கணினிகளாயினும் அவற்றை ஒன்றோடொன்று இணைத்துப் பயன் படுத்துவதில் பல அனுகூலங்கள் உள்ளன. இரண்டு கணினிகளை இணைத்து ஒரு சிறிய கணினி வலயமைப்பை உருவாக்க ஒன்றுக்கு மேற்பட்ட வழி முறைகளும் உள்ளன. அவற்றுள் அதிக செலவில்லாமல் இணைக்கக் கூடியது க்ரொஸ் ஒவர் (cross-over) கேபல் கொண்டு இணைப்பதாகும். அதன் மூலம் இரண்டு கணினிகளுக்கிடையே பைல்களைப் பரிமாறிக் கொள்ளவும் இணைய இணைப்பு மற்றும் ப்ரிண்டர்களை பகிர்ந்து கொள்ளவும் முடியும்..இணைய இணைப்பைப் பகிர்ந்து கொள்வதாயின் ஒரு கணினியில் இரண்டு நெட்வர்க் கார்டுகளை (Network Interface Card) பொருத்த வேண்டி யிருக்கும். ஒரு கார்டை ப்ரோட்பேண்ட் (Broadband) இணைப்புக்கான ரூட்டரிலும் (Router) மற்றொரு கார்ட் அடுத்த கணினியை இணைக்கவும் பயன் படுத்தப்படும்.
ப்ரோட்பேண்ட் இணைய இணைப்பைப் ப்கிர வேண்டிய அவசியமில்லை அல்லது நீங்கள் பயன் படுத்துவது டயல் அப் (Dial up) இணைப்பு எனின் ஒரு கணீனியில் இரண்டு நெட்வர்க் கார்டுகள் தேவைப் படாது.. இரண்டு கணினிகளை இணைப்பது பைல்களைப் பரிமாற மட்டுமே எனின் இரண்டு கணினிக்ளிலும் ஒவ்வொரு நெட்வர்க் கார்ட்இருந்தாலே போதுமானது

.

எனினும் இவ்வாறு இரண்டு கணினிகளை இணைக்கும் போது சில வரையறைகளும் உள்ள்ன என்பதைக் கவனத்திற் கொள்ள் வேண்டும். உதாரணமாக் இணைய இணைப்பையோ அல்லது ப்ரிண்டரையோ பகிர்ந்து கொள்ளும் போது இரண்டு கணிகளும் இயக்க நிலையிலேயே இருக்க வேண்டும் என்பதையும் மறந்து விடாதீர்கள்,.
இடையில் ஹப் (Hub) , ஸ்விச் (Switch) போன்ற வேறு எந்த சாதனங்களும் இல்லாமல் நெட்வர்க் கார்ட் ஊடாக மட்டுமே இணைப்பதற்கு இரண்டு கணினிகளையும் விசேட cross-over கேபல் பயன் படுத்தப்படுகிறது.. இந்த க்ரொஸ் ஓவர் கேபல் வழமையான (Ethernet) ஈதர்நெட் கேபலிலிருந்து வேறுபட்டது. இத்னை நாமாகவே த்யாரித்துக் கொள்ளவும் முடியும்.
இரண்டு கணினிகளையும் கேபல் கொண்டு இணைத்து விட்டால் மாத்திரம் அவற்றிற்கிடையே தொடர்பாடலை மேற் கொள்ள் முடியாது. அடுத்த வேலையாக இரண்டு கணினிகளிலும் ஐபி முகவரிகளை கீழுள்ளவாறு மாற்றியமைக்க வேண்டும்.
விண்டோஸ் எக்ஸ்பீ இயங்கு தளத்தில் முதல் கணினியில் Start → Settings ஊடாக Network Connections தெரிவு செய்யுங்கள். அப்போது திறக்கும் விண்டோவில் Local Area Network என்பதன் கீழ் நெட்வர்க் கார்டுக்குரிய ஐக்கனை மஞ்சள் நிறத்தில் விழிப்புக் குறியுடனும் “Limited or No Connectivity” எனும் செய்தியுடனும் காண்பிக்கும். அதாவது கணினிகளுக்கிடையே தொடர்பாடலை மேற் கொள்ள இரண்டு கணினிகளும் இன்னும் தயாராயில்லை என்பதையே இது காட்டுகிறது

அடுத்து அந்த ஐக்கன் மீது ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவிலிருந்து Properties தெரிவு செய்யுங்கள்., அப்போது தோன்றும் Local Area Connection Properties டயலொக் பொக்ஸில் General டேபின் கீழ் Internet Protocol (TCP/IP) என்பதைத் தெரிவு செய்து அதன் கீழுள்ள் Properties பட்டனில் க்ளிக் செய்யுங்கள். தோன்றும் டயலொக் பொக்ஸில் Use the following IP address என்பதைத் தெரிவு செய்து கீழுள்ள்வாறு அதன் ஐபி முகவரியை மற்றியமையுங்கள்..
முதல் கணினியில் (PC-1) ஐபி முகவரியாக 192.168.0.1 எனவும் இரண்டாவது கணினியில் (PC-2) 192.168.0.2 எனவும் வழங்குங்கள். இப்போது இரண்டு கணினிகளையும் இணைத்தாயிற்று, இதனை உறுதி செய்து கொள்ள வேண்டுமானால் மறு படியும் Start → Settings ஊடாக Network Connections தெரிவு செய்ய் வரும் விண்டோவில் நெட்வர்க் கார்டுக்குரிய ஐக்கனில் ம்ஞ்சல் நிற விழிப்புக் குறி மறைந்திருப்பதைக் காணலாம். சில வேளை அந்த ஐக்கன் மேல் பூட்டு வடிவில் ஒரு ஐக்கன் இருப்பதை அவதானித்தால் Firewall இயக்க நிலையிலுள்ளது என்பதையே காட்டுகிறது. அவ்வாறிருந்தால் பைல் பரிமாறம் செய்வதை விண்டொஸ் அனுமதிக்காது. அதனை இடப்பக்கம் Network Task என்பதன் கீழ் Change Windows Firewall Settings என்பதைக் க்ளிக், செய்து தற்காலிகமாக நிறுத்திக் கொள்ளுங்கள்.. தற்போது இந்த சிறிய வலையமைப்பில் பைல், போல்டர் மற்றும் வளங்களைப் பகிர்ந்து கொள்ளக் கூடியதாயிருக்கும்.
IP Address: 192.168.0.1
Subnet Mask: 255.255.255.0
Default Gateway: 192.168.0.1
Preferred DNS Server: 192.168.0.1
படங்கள் பிரசுரமாகுமாயிருந்தால்
நிழற் படுத்தப் பட்ட பகுதி அவசியமில்லை இரண்டாவது கணினியிலும் கீழே காட்டியுள்ளது போன்று ஐபி முகவரியை மாற்றி அமையுங்கள்.
IP Address: 192.168.0.2
Subnet Mask: 255.255.255.0
Default Gateway: 192.168.0.1
Preferred DNS Server: 192.168.0.1

அதி வேக ப்ரோடபேண்ட் இணைய இணைப்பைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமாயின் இரண்டு கணினிகளிலும் ஐபி முகவரியை மாற்றியமைக்கும் இடத்தில் “Obtain an IP address automatically” என்பதைத் தெரிவு செய்ய் வேண்டும்.

எனினும் அதிவேக இணைய இணைப்பை இரண்டு கணினிகளுக்கிடையே பகிர்ந்து கொள்ள வேண்டுமாயின் நேரடியாக் க்ரொஸ் ஓவர் கேபல் கொண்டு இணைப்பதை விட இடையில் இரண்டு அல்லது நான்கு போர்டுக்ள் (Ports) கொண்ட ரூட்டர் மூலம் இணைப்பதே சிறந்த வழி முறையாகும். எனினும் அதற்கு க்ரொஸ் ஓவர் கேபலை விட செலவு சற்று அதிகமாயிருக்கும். .என்பதை நினைவில் கொள்ளவும்.

நினைவோடு

இவண்

::விமல் ::

Friday, October 16, 2009

எதனா‌ல் தீபாவ‌ளி கொ‌ண்டாட‌ப்படு‌கிறது ?





அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்கள் எல்லாரும் நலமா? அது சரி இந்த தீபாவளி ஏன் கொண்டாடுகின்றோம் தெரியுமா ? இது தெரியாம நம்மல பலர் பலகாரம் சுட்டு கொண்டாடி கொண்டு இருக்காங்கலாம் அப்படினு அன்மைல எடுக்கப்பட் ஆய்வு எது சொல்லல.... எதோ மனசுல சுட்டது சாரி ....பட்டத சொல்லுறன்...ஆனா அதுக்கு இப்படியும் கத கட்டிறுக்காங்க அந்த காலத்துல.. எது எப்படினாலும் இதலாம் நாங்க நம்ப தயார இல்லனு இருகிங்கதான் சிலர் என்ன போல நம்பாவிடில் பரவாயில்ல தெரிசுக்குவோமே..... வாசித்து கொண்டு தானே இருக்கிங்க........

இ‌த்து மத‌‌த்‌தினரையு‌ம் ஈ‌ர்‌‌க்கு‌ம் ஒரே ப‌ண்டிகை ‌தீபாவ‌ளிதா‌ன
். இ‌ந்த ப‌ண்டிகை அ‌க்ப‌ர் கால‌த்‌திலேயே இ‌ந்து‌ மத‌த்‌தின‌ர் கொ‌ண்டாடி இரு‌க்‌கிறா‌ர்க‌ள். அ‌ப்போது அவ‌ர்க‌ள் இ‌ந்த ப‌ண்டிகையை கொ‌ண்டாட எ‌ந்த‌வித தடையு‌ம் ‌‌கிடையாது. அ‌ந்த ப‌ண்டிகையை ம‌கி‌ழ்‌‌ச்‌சியோடு கொ‌ண்டாடி இரு‌க்‌கிறா‌ர்க‌ள்.

தீபாவ‌ளி வ‌ந்தாலே குழ‌ந்தைகளு‌க்கு கொ‌ண்டா‌ட்ட‌ம்தா‌ன். ப‌ட்டாசு வெடி‌த்து ஆன‌ந்த கு‌த்தாடு‌ம் அவ‌ர்க‌‌ளி‌ன் ம‌கி‌ழ்‌‌ச்‌‌சி‌க்கு எ‌ல்லையே ‌கிடையாது. பெ‌‌ரியவ‌ர்க‌ள் வரை ப‌ட்டாசு வெடி‌த்து ம‌கி‌ழ்‌ச்‌சி அடைவா‌ர்க‌ள்.

தீபாவ‌ளி ப‌ண்டிகை ஏ‌ன் கொ‌ண்டாட‌ப்படு‌கிறது எத‌ற்காக கொ‌‌ண்டாட‌ப்படு‌கிறது எ‌ன்பதை பா‌ர்‌‌ப்போ‌ம்!

நரகாசுர‌ன் எ‌ன்ற அர‌க்க‌ன் ஒருவ‌ன் இரு‌ந்தா‌ன். அவனு‌க்கு இ‌ந்த மூவுலகமு‌ம் த‌ன் க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ல் கொ‌ண்டு வ‌ந்து த‌ன் ‌விரு‌ப்ப‌த்‌தி‌ற்கு அனுப‌வி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்ற பேராசை இரு‌ந்தது. தேவ‌ர்க‌ள் கூட த‌ன் காலடி‌‌யி‌ல் ‌கிட‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்ற ந‌ப்பாசை இரு‌ந்தது.

இ‌ந்த ஆசைகளை ‌நிறைவே‌ற்ற ‌பிர‌ம்மனை நோ‌க்‌கி கடு‌ம் தவ‌ம் இரு‌ந்தா‌ன் நரகாசுர‌ன்.

இதனை பா‌ர்‌த்த ‌‌பிர‌ம்ம‌ன், தன‌‌க்காக தவ‌ம் இரு‌ந்த நரகாசுரனு‌க்கு அவ‌ன் கே‌‌ட்கு‌ம் வர‌ங்களை அ‌ள்‌ளி அ‌ள்‌ளி கொடு‌த்தா‌ர். ஒரு கெ‌ட்டவ‌னு‌‌க்‌கு ‌ப‌த‌வி கிடை‌‌த்தா‌ல் எ‌ப்படியெ‌ல்லா‌ம் பய‌ன்படு‌த்துவானோ அ‌ப்படியெ‌ல்லா‌ம் பய‌ன்படு‌த்‌தி‌க் கொ‌ண்டா‌ன் நரகாசுர‌ன்.

எ‌ல்லோரு‌க்கு‌ம் து‌ன்ப‌ம் ‌விளை‌வி‌த்து வ‌ந்த நரகாசுர‌ன், தே‌வ‌ர்களையு‌ம் மு‌‌னிவ‌ர்களையு‌ம் அவ‌ன் கொடுமை‌ப்படு‌த்‌தினா‌ன். அதும‌ட்டு‌‌ன்‌றி தன‌க்கு வர‌ம் கொடு‌த்த ‌பிர‌ம்மனை எ‌தி‌ர்‌த்தே போ‌ர் தொடு‌த்தா‌ன் நரகாசுர‌ன்.

வர‌த்தை கொடு‌த்து ‌வி‌ட்டு நரக வேதனைகளை அனுப‌வி‌க்க வே‌ண்டி இரு‌க்‌கிறதே எ‌ன்று புல‌ம்‌பினா‌‌ர் பிர‌ம்ம‌ன். கா‌க்கு‌ம் கடவுளான ‌கிரு‌ஷ்ண பகவா‌னிட‌ம் த‌ன் குறைகளை கூ‌றி முறை‌யி‌‌ட்டா‌ர்.

இதனா‌ல் ‌கிரு‌ஷ்ண பகவா‌ன் நரகாசுரனை அணு‌கி, தவ‌‌ம் செ‌ய்து பெ‌ற்ற வர‌த்தை தவறான வ‌ழி‌யி‌ல் செய‌ல்படு‌த்துவது ‌நியாய‌ம் அ‌ல்ல எ‌ன்று முறையாக சொ‌ல்‌லி பா‌ர்‌த்தா‌ர்.

ஆனா‌ல் நரகாசுர‌ன் கே‌ட்பதாக இ‌ல்லை. த‌ன் ‌விரு‌ப்ப‌ம் போ‌ல் ம‌க்களை கொடுமை‌ப்படு‌த்‌தினா‌ன். இதனா‌ல் கோப‌‌ம் அடை‌ந்த ‌கிரு‌‌ஷ்ண பகவா‌ன், நரகாசுரனை போரு‌க்கு அழை‌த்து த‌‌ம் ச‌க்கராயுத‌த்தா‌ல் அவ‌னி‌ன் உடலை இர‌ண்டாக ‌பிள‌ந்தா‌ர்.

இற‌க்கு‌‌ம் ‌நிலை‌யி‌ல் இரு‌ந்த நரகாசுர‌ன், கிரு‌ஷ்ண‌னி‌ன் காலை ‌பிடி‌த்து, பகவானே எ‌ன்னுடைய சாவு கெ‌ட்டவ‌ர்களு‌க்கு ஒரு பாடமாக இரு‌க்க வே‌ண்டு‌ம். நா‌ன் செ‌ய்த பாவ‌ங்களை ம‌ன்‌னி‌த்து ‌விடு‌ங்க‌ள் எ‌ன்று கெ‌ஞ்‌சினா‌ன்.

இற‌‌க்கு‌ம் ‌நிலை‌யி‌ல் உ‌ள்ள என‌க்கு ஒரு ஆசை. அதை இ‌ப்போது தெ‌ரி‌வி‌க்‌கிறே‌ன் எ‌ன்று சொ‌ன்ன நரகாசுர‌ன், கொடியவனாக நா‌ன் இற‌க்கு‌ம் இ‌ந்நாளை ம‌க்க‌ள் அனைவரு‌ம் அ‌‌ல்ல‌ல் ‌நீ‌ங்‌கிய ந‌ன்நாளாக ம‌ங்களகரமான நாளாக கொ‌‌ண்டாடி ம‌கிழ வே‌ண்டு‌ம் எ‌ன்று வே‌ண்டினா‌ன்.

கிரு‌ஷ்ண பகவானு‌ம் அ‌வ்வாறே அவனு‌க்கு அரு‌ளினா‌ர். இதனா‌ல் தா‌ன் நரகாசுர‌ன் இ‌ற‌ந்த நாளை‌த்தா‌ன் இ‌ந்து‌க்க‌ள் ‌தீபாவ‌ளியாக கொ‌‌ண்டாடி வரு‌கி‌ன்றன‌ர் எ‌‌ன்று ஜ‌தீக‌ம் கூறு‌கிறது.

இ‌ந்த ந‌ன்நா‌ளி‌ல் அ‌திகாலை‌யி‌ல் எழு‌ந்து எ‌ண்ணெ‌ய் த‌ே‌ய்‌த்து கு‌‌ளி‌த்து, பு‌த்தாடை அ‌ணி‌ந்து பல வகை ப‌ண்ட‌ங்க‌ள் செ‌ய்து ப‌ட்டாசு வெடி‌த்து கொ‌ண்டாடி வரு‌கிறோ‌ம்.

தீபாவ‌ளி இ‌ங்கு ம‌ட்டு‌ம் கொ‌ண்டாட‌ப்படு‌வ‌தி‌ல்லை. உலக‌ம் முழுவது‌ம் ‌இ‌ந்த ப‌ண்டிகை கொ‌ண்டாட‌ப்ப‌ட்டு வரு‌கிறது.

தீபாவ‌ளி எ‌ன்றா‌ல் ‌‌தீப‌ங்க‌ளி‌ன் வ‌ரிசை எ‌ன்று பொரு‌ள் உ‌ண்டு. இ‌ந்தநா‌ளி‌ல் ‌தீப‌ங்களை வ‌ரிசையாக வை‌த்து ம‌கி‌ழ்‌ந்து கொ‌ண்டாடுவா‌ர்க‌ள்.

ராம‌பிரா‌ன் இல‌‌ங்கை செ‌ன்று ராவணனோடு கடு‌ம் போ‌ர் பு‌ரி‌ந்து, தனது இ‌ல்லாளான ‌(மனை‌வி) சீதா ‌பிரா‌ட்டியாரை ‌மீ‌ட்டு‌க் கொ‌ண்டு அயோ‌த்‌தி‌க்கு ‌திரு‌‌‌ம்‌பி வ‌ந்தா‌ர்.

த‌ன் வனவாச‌ம் முடி‌ந்து நா‌ட்டை ஆள வரு‌ம் வெ‌ற்‌றி ‌வீர‌ர் ராமரை வரவே‌ற்க ம‌க்க‌ள் ‌மிகவு‌ம் ம‌கி‌ழ்‌ச்‌சியாக ‌தீப‌ங்களை ஏ‌ற்‌றி கொ‌ண்டாடினா‌ர்க‌ள்.

அதனா‌ல்தா‌ன் ‌தீபாவ‌‌ளி அ‌ன்று ‌திரு‌விள‌க்குகளை வ‌ரிசையாக ஏ‌ற்‌றி வை‌க்கு‌ம் வழ‌க்க‌ம் ஏ‌ற்ப‌ட்டதாக கூறுவா‌ர்க‌‌ள்.

தீபாவ‌ளியை நரக சது‌ர்‌தசி எ‌ன்று‌ம் அழை‌ப்பா‌ர்க‌ள். ஐ‌‌ப்ப‌சி மாத‌த்‌தி‌ல் சூ‌ரிய‌ன் துலா ராசி‌யி‌ல் இரு‌ப்பார். அ‌ப்போது தே‌ய் ‌பிறையான (‌கிரு‌ஷ்ண ப‌ட்ச‌ம்) 14ஆ‌ம் நா‌ளி‌ல் கொ‌ண்டாட‌ப்படு‌ம்.

தி‌ரியோத‌சி இரவு சது‌ர்த‌சி காலை கொ‌ண்டாட‌ப் பெறுவ‌தினா‌ல் இத‌ற்கு நரக சது‌ர்‌த்த‌சி எ‌ன்று வழ‌ங்க‌ப்படு‌கிறது.

நம்பிடிங்களா..
நன்றியோடு இவண் விமல் ::

Friday, August 28, 2009

நமக்காக ஆடியவர்


சலூட் சார் - - -
நமக்காக நீங்கள் ஆடிய ஆட்டம் என்ன பாடல் என்ன - - - கிடைக்குமா அந்த பொழுது மீண்டும் - - - இன்று உமது பிறந்தநாள் வாழ்த்துக்களைதெரிவித்துக்கொள்கின்றேன்.

1958ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 29ஆம் திகதி பிறந்த மைக்கல் ஜக்ஸன், தனது முதலாவது இசை பயணத்தை தொடர்ந்தார்.

பின்னர் 1980 களில் பொப் இசை பாடகர் என்ற புகழை பெற்றதோடு, 1982ஆம் ஆண்டு வெளிவந்த அவரது த்ரிலர் என்ற இசைத்தொகுப்பு உலகளாவிய வரவேற்பை பெற்றதுடன், அதிகளவு வசூலை பெற்றுக் கொடுத்துள்ளது.
மைக்கல் ஜக்ஸன் பொப் இசைத்துறையில் மட்டும் அல்லாது பாடல் ஆசிரியர், நடிகர், ஏழுத்தாளர், இசையமைப்பாளர், வணிகர் உட்பட மேலும் பல துறைகளில் சிறந்து விளங்கியுள்ளார். மைக்கல் ஜாக்சன்
மைக்கல் ஜாக்சன்
மைக்கல் ஜாக்சன்
மறைந்த இசைச் சக்கரவர்த்தி மைக்கல் ஜாக்சனின் வாழ்க்கை, சாதனைகளும் வேதனையும் நிறைந்தது.

சிறு வயது முதலே தனது சகோதரரர்களுடன் மேடையேறிய மைக்கல் ஜாக்சன் அவர்கள், நவீன இசையுலகை தனது ஆழுமையால் கட்டிப் போட்டிருந்தார்.

அதேவேளை, பல்வேறு சர்ச்சைகளும் அவரது வாழ்வில் நிறைந்தே காணப்பட்டன.

அவரது வாழ்க்கை பற்றிய ஒரு சிறு குறிப்பை இங்கே நீங்கள் வாசித்தது.

மைக்கல் ஜாக்சன் ஒரு பிரபல பாடகர் என்பதையும் தாண்டி நூறு கோடி டாலர்கள் பெறுமதியுள்ள ஒரு தொழில்துறையாகவும் இருந்தார்.

கிங் ஒஃப் பாப் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட மைக்கேல் ஜாக்சன் பிரம்மாண்ட வருமானம் கொண்டவராக இருந்த அதே நேரம் 50 கோடி டாலர்கள் கடனாளியாகவும் இருந்ததார். எது எப்படி இருந்தாலும் சரி நமக்கா அவர் என்றும் நம்மில் நிலைப்பார் ...........